உ-ம் : குறுந்தாட்கோழி எனற்பாலது ‘குறுத்தாட்கோழி’ எனவருதல் வலிக்கும்வழி வலித்தல். ‘குற்றியலுகரம்’ என்பது ‘குன்றியலுகரம்’ எனவருதல் மெலிக்கும் வழி மெலித்தல். ‘தண்டுறைவன், எனற்பாலது ‘தண்ணந்துறைவன்’ என வருதல் விரிக்கும் வழி விரித்தல். ‘மழவரை ஒட்டிய’ என : உருபு விரிந்து வரற்பாலது ‘மழவர் ஓட்டிய’ என வருதல் தொகுக்கும் வழித்தொகுத்தல், ‘விடுமின்’ எனற்பாலது ‘வீடுமின்’ என வருதல் நீட்டும் வழி நீட்டல். ‘தீயேன்’ எனற்பாலது ‘தியேன்’ என வருதல் குறுக்கும் வழிக்குறுக்கல். ஆதி உ-ம் : | கன்று ஆ - கற்றா - வலித்தல் | | வெற்றி - வென்றி - மெலித்தல் | | மனிதர் - மனித்தர் - விரித்தல் | | செய்கஎன - செய்கென - தொகுத்தல் | | நிழல் - நீழல் - நீட்டல் | | ஆறுவகை - அறுவகை - குறுக்கல் |
சிவ வலிக்கும் வழி வலித்தல் முதலிய யாவும் இலக்கணத்துக்கு மாறாக அமைக்கப்படுவன என்பதும் அவை வழுவாயினும் செய்யுளின்பம் நோக்கி அமைக்கப்பட்டன என்பதும் கொள்க ஆதித்தர் குறுக்கலுக்குக் காட்டிய உதாரணம் பொருந்தாது. பொருள்கோள் வகை 398. | நிரனிறை சுண்ண மடிமறி மொழிமாற் | | *றவைநான் கென்ப மொழிபுண ரியல்பே (8) | | | | (நிரல் நிறை சுண்ணம் அடிமறி மொழிமாற்று அவை நான்கு என்ப மொழிபுணர் இயல்பே) |
ஆ. மொ. இல. The scholars say that the syntax in poetry is of four kinds which are ‘Niral nirai’, ‘Sunnam’ ‘Adimari’ and Molimarru.
* எனநான் கென்ப பொருள்புணரியல்பே-தெய்-பாடம். |