பி. இ. நூ. நேமி. சொ. 67 அடிமொழி சுண்ணம் நிரனிறை விற்பூட்டு அடிமறி யாற்று வரவும்-துடியிடையாய் தாப்பிசை தாவில் மொழிமாற்று அளைமறி பாப்புப் பொருளோடொன் பான். நன். 411 யாற்றுநீர் மொழிமாற்று நிரனிறை விற்பூண் தாப்பிசை யளைமறி பாப்புக்கொண்டு கூட்டு அடிமறி மாற்றெனப் பொருள்கோள் எட்டே. இ. வி. 361 ௸ ௸ ௸ இளம் என்பது நிரனிறை, சுண்ணம், அடிமறி, மொழி மாற்று என நான்கு வகையான் மொழிகள் தம்முள் புணருஞ் செய்யுளகத்து என்பது உணர்த்தியவாறு. அவையாமாறு அவற்றவற்றுச் சிறப்புச் சூத்திரங்களால் அறிக. சேனா இனிச் செய்யுளிடத்து விகார வகையான் மொழிகள் தம்முள் புணருமாறு கூறுகின்றார். இ-ள் : நிரனிறையும் சுண்ணமும் அடிமறியும் மொழி மாற்றும் என நான்கென்று சொல்லுப அந்நான்கு சொல்லும் செய்யுளிடத்துத் தம்முட் புணருமுறைமை, எ-று. நான்கு சொல்லும் என்பதூஉம் செய்யுளிடத்து என்பதூஉம் அதிகாரத்தாற் பெற்றாம். நிரனிறையும் சுண்ணமும் மொழிமாற்றாதல் ஒக்குமாயினும் நிரனிற்றலும் அளவடியெண்சீரைச் சுண்ணமாகத் துணித்தலுமாகிய வேறுபாடுடைமையான் அவற்றைப் பிரித்து அவ்வேறு |