பக்கம் எண் :

58தொல்காப்பியம்-உரைவளம்

“கொடி குவளை கொட்டை நுசுப்பு உண்கண் மேனி” என முடிவனவும் முடிப்பனவுமாகிய பெயர்ச்சொல் வேறு, வேறு நிரலே நிற்றலின் பெயர் நிரல் நிறையாயிற்று. இது கொடி நுசுப்பு, குவளை யுண்கண், கொட்டை மேனி என இயையும்.

உடலும் உடைந்தோடும் ஊழ்மலரும் பார்க்கும்
கடலிருள் ஆம்பல் பாம்பென்ற-கெடலருஞ் சீர்த்
திங்கள் திருமுகமாச் செத்து.

என முடிப்பனவாகிய வினையும் முடிவனவாகிய பெயரும் வேறு வேறு நிரலே நிற்றலின் பொது நிரல் நிறையாயிற்று. இது, திருமுகம் திங்களாகக்கருதி கடலும் உடலும் இருளும் உடைத்தோடும், ஆம்பலும் ஊழ் மலரும், பாம்பும் பார்க்கும் என இயையும்.

நினையத் தோன்றி என்றதனால், முடிவனவாகிய சொல்லும் முடிப்பனவாகிய பொருளும் நேர்முறையில் நிரல் பட நில்லாது எதிர் முறையில் மயங்கி வருதலும் கொள்வர்.

“களிறும் கந்து போல நளிகடல்
கூம்பும் கலனும் தோன்றும்”

எனவரும். இதன் கண், ‘களிறும் கந்தும் போலக் கலனும் கூம்பும்’ எனவருதல் வேண்டும். அவ்வாறு கூறாது ‘கூம்பும் கலனும்’ என எதிர்மாற்றிக் கூறினமையால் ‘மயக்க நிரல்நிறை’ ஆயிற்று. இதனை ‘எதிர் நிரல் நிறை’ என வழங்குதலும் உண்டு.

ஆதி

உ-ம் : 1.சர்க்கரை வேம்பு உப்பு பாக்கு
   இனிக்கும் கசக்கும் கரிக்கும் துவர்க்கும்
   
 2. ஒருகண் முக்கண் ஊசி தேங்காய்க்கு ஆம்
   
 3.

முகப்பல் இதழ்முலை நான்கும் முறையே

  முழுமதி முத்து பவளம் மலையாய்
  அகப்பொருள் வல்லார் அறிவிக்கின்றார்