பெயர் வினை இடைஉரி என்பன இயற்சொற் பாகுபாடாகலான், இயற்சொல் அந்நான்கு பாகுபாட்டானும் செய்யுட்குரித்தாம். திரிசொல் பெயராயல்லது வாரா. 3என்மனார் என்பதனை வினைத்திரி சொல் என்பாரும் உளர் அஃது என்றிகினோர், ‘பெறலருங்குரைத்து’ (புறம். 5) என்பன போலச் செய்யுள் முடிபு பெற்று நின்ற தென்றலே பொருத்த முடைத்து. தில் என்னும் இடைச்சொல் தில்ல என்றானும் தில்லை என்றானும் திரிந்து நின்றவழி அவை வழக்கிற்கும் உரியவாகலின் திரிசொல் எனப்படா. 4கடுங்கால் என்புழிக்கடி என்னும் உரிச்சொல். ‘பெயரினும் வினையினும் மெய்தடுமாறி (உரியியல் 1) என்பதனாற் பண்புப் பெயராய்ப் பெயரொடு தொக்கு வழக்கினுட் பயின்று வருவதலால் திரிசொல் எனப்படாது. திசைச் சொல்லுள் 5ஏனைச் சொல்லும் உளவேனும் செய்யுட் குரித்தாய் வருவது பெயர்ச் சொல்லேயாம். வட சொல்லுள்ளும் பெயரல்லது செய்யுட்குரிய வாய் வாரா இவ்வாறாதல் சான்றோர் செய்யுள் நோக்கிக் கண்டு கொள்க. தெய் என்பது சூத்திரம். இதன் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், ஒரு வகையாற் செய்யுட்குரிய சொல்லின் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று. 3. என்பர் அல்லது என்றார் என்னும் வினையின் திரிசொல் என்பர். கிளவியாக்கம் முதல் நூற்பா உரை வளத்தில் என்மனார் பற்றிய விளக்கம் காண்க. 4. ‘கடி’ என்னும் சொல்கால் என்னும் பெயரில் வரும்போது ‘கடு‘ எனத்தன் உரு(வடிவம்) திரிந்து கடுங்கால் என வந்தது. அதனால் புலவரால் செய்யுட்காகத் திரித்து கொள்ளப்பட்ட சொல் எனப்படாது. 5. ஏனைச்சொல் - வினைச் சொல் முதலிய சொற்கள். |