பக்கம் எண் :

எச்சவியல் சூ. 17

இ-ள் : இயற் சொல்லும், திரி சொல்லும், திசைச்சொல்லும் வடசொல்லும் எனவரும் நால் வகைத்து, செய்யுளாக்குதற்குரிய சொல், எ-று.

அவையாமாறு தத்தம் சிறப்புச் சூத்திரத்தான் உணரப்படும்.

நச்

என்பது சூத்திரம்.

செய்யுட்குரிய சொல்லும், அவற்று இலக்கணமும், அவற்றின் விகாரமும், அச்செய்யுட் பொருள்கோளும் முதல் உணர்த்துகின்றார்.

இச்சூத்திரம் செய்யுள்விதி ஒழிபு பெரும்பான்மைத்து ஆதலின் செய்யுட் செய்தற்கு உரிய சொற்கள் இவை என அவற்றின் வரையறை கூறுகின்றது.

இ-ள் : இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று அனைத்தே-இயல்பாகிய சொல்லும் அதுதான் திரிந்து வரும் சொல்லும் திசைக்கண் வழங்கும் சொல்லும் ஆரியச் சொல்லும் என்று கூறிய அத்துணையே, செய்யுள் ஈட்டச் சொல்லே-ஒரு பொருள்மேல் நிகழும் செய்யுளை ஈட்டுதற்கு உரிய சொல்லாவன, எ-று.

எனவே, பிறபாடைச்சொற்கள் ஈட்டுதற்கு உரிய அன்றிச் சிறுபான்மை வரும் ஆயின; 1அவை, செப்பு, குளிரு, சிக்கு, அந்தோ என்றாற் போல்வன பிறவுமாம்.

இயல்பாகியசொல் முற்கூறிய நால்வகைச் சொல்லேயாய் நின்று செய்யுட்கு உரித்தாம்.

அவ்வியற்சொல், திரிசொல் ஆங்கால் பெரும்பான்மை பெயராகவும் சிறுபான்மை வினைத்திரி சொல்லாகவும் திரிதலன்றி இடையும் உரியுமாகத் திரிந்து வாரா.


1. செப்பு-தெலுங்குச்சொல் குளிரு, சிக்கு-கன்னடச்சொல், அந்தோ-சிங்களச்சொல்.