அளவடி யல்லாதன விகாரவடியாகலிற், ‘பட்டாங்கமைந்திலவாதலின்’, ‘பட்டாங்கமைந்தவீரடி’ யெனவே அளவடியாதல் பெறப்படும். ஈரடி யெண் 1’விகாரவடியானும் பெறப்படுதலின் அவற்றை நீக்குதற்குப் ‘பட்டாங்கமைந்த வீரடி என்றார். எனவே, சுண்ணம் அளவடியிரண்டனுள் அல்லது பிறாண்டு வாராதென்பது. உ-ம் : | சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய | | யானைக்கு நீத்து முயற்கு நிலை யென்ப கானக நாடன் சுனை |
என்புழி ஆழ, மிதப்ப, நீத்து, நிலை என்பனவும், சுரை, அம்மி, யானைக்கு, முயற்கு என்பனவும் நின்றுழி நிற்ப இயையாமையின் சுரை மிதப்ப, அம்மியாழ, யானைக்கு நிலை, முயற்கு நீத்து எனத் துணித்துக் கூட்ட இயைந்தவாறு கண்டு கொள்க. 2சுண்ணம் போலச் சிதராய்ப் பரந்து கிடத்தலிற் சுண்ணம் என்றார். தெய் சுண்ணமாகிய பொருள்கோள் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : சுண்ணமாவதுதான் அளவடியான் அமைந்த ஈரடிக்கண் எண் சீரும் ஒரோவொரு சீராகத் துணித்துப் பொருந்து வழி யறிந்து கூட்டிப் பொருளுரைக்க, எ-று. பட்டாங்கு என்பது இயல்பு. அது மிகுதலும் குறைதலுமில்லாத அளவென்று பொருளாயிற்று. சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலை யென்ப கானக நாடன் சுனை.
1. விகாரவடியானும் பெறப்படுதலாவது முதலடி ஐந்து சீரும் இரண்டாவது அடிமூன்று சீருமாக ஈரடியெண் சீர் அமைதலாம். இதை நீக்கவே பட்டாங்கமைந்த ஈரடி எண்சீர் என்றார். 2. சுண்ணம்-பொடி |