பக்கம் எண் :

சுண்ணப் பொருள்கோள் சூ. 1061

இதனுட் சுரை மிதப்ப, அம்மி ஆழ, யானைக்கு நிலை, முயற்கு நீத்து எனத் துணித்து ஒட்டப் பொருள் விளங்கியவாறு கண்டு கொள்க. இது நாற்சீர்கண்ணே துணித்து ஒட்டியது.

தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல்
வெண்கோழி முட்டை யுடைத்தன்ன மாமேனி
அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே
வங்கத்துச் சென்றார் வரின்

இதன் பொருள் : அஞ்சனத்தன்ன பைங்கூந்தல் ! மாமை பொருந்தின மேனிமேல் தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட கோழி முட்டையுடைத்தா லொத்த பசலை, வங்கத்துச் சென்றார் வரின் தணிவேம், எ-று *இதனுள் எண்சீருள் ஒட்டி வந்தது. எண்சீர் என வரையறுத்தமையால் அதன்மேற் சென்று ஒட்டா தென்க.

நச்

இது, சுண்ணம் ஆமாறு கூறுகின்றது.

இ-ள் : சுண்ணந்தானே - சுண்ணமாவது, பட்டாங்கு அமைந்த ஈர் அடி எண்சீ்ர் - இயல்பாக அமைந்த ஈரடிக் கண் உளவாகிய எண்சீரை , துணித்தனர் ஒட்டுவழி அறிந்து இயற்றல்- துணித்து இயையும் வழி அறிந்து கூட்டி இயற்றப்படுவதாம், எ-று.

ஈரடி யெண்சீர் அளவடி அல்லா விகார அடியானும் பெறப்படுதலின், அவற்றை நீக்குதற்கு ‘அளவடியான் அமைந்த, என்பார் ‘பட்டாங் கமைந்த ஈரடி’ என்றார்.

உ-ம் :சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய
 யானைக்கு நீத்து முயற்கு நிலை யென்ப
கானக நாடன் சுனை.

* இத்தொடர் “இதனுள் பலவடி எண்சீருள் ஒட்டி வந்தது; ‘ஈரடியெண்சீர் என வரையறுத்தமையால் அதன்மேற் சென்று ஒட்டாதென்க” என்றிருப்பின் நன்றாம்-சிவ