சுரை மிதப்ப, அம்மி ஆழ, யானைக்கு நிலை , முயற்கு நீத்து எனத் துணித்துக் கூட்ட இயையும். சுண்ணம் போலச் சிதர்ந்து கிடத்தலின் சுண்ணம் ஆயிற்று. இதனுள் ஆழ அம்மி நீத்து முயற்கு என ஒட்டிப்பொருள் தந்து நின்றனவேனும் சுரைக்கும் யானைக்கும் சொல்முடிவு நோக்குப்பட நின்று பொருள் உணர்த்தாமையின் மாற வேண்டிற்று. வெள் இது சுண்ணமாமாறு கூறுகின்றது. இ-ள் : சுண்ணமாவது இயல்பாக அமைந்த ஈரடிக்கண் உளவாகிய எண்சீரை இயையும் வழியறிந்து கூட்டி இயற்றப்படுவதாம், எ-று. பட்டாங்கு-இயல்பு. இயல்பாக அமைந்த ஈரடி எண்சீர் எனவே நாற்சீரடியாக அமைந்த ஈரடியென்சீர் என்பதாம். எனவே, சுண்ணமாகிய பொருள்கோள் அளவடி யிரண்டனுள் அல்லது பிறவிடத்து வாராது என்பதாயிற்று உ-ம் : | சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய | | யானைக்கு நீத்து முயற்கு நிலை யென்ப கானக நாடன் சுனை. |
என்புழி முதல் இரண்டடிகளிலும் உள்ள சீர்களை, சுரை மிதப்ப, அம்மி ஆழ, யானைக்கு நிலை, முயற்கு நீத்து எனத் துணித்துக் கூட்டத் தம்முள் இயைந்தவாறு கண்டுகொள்க. சுண்ணம் (பொடி) போலச் சிதராய்ப் பரந்து கிடத்தலின் இதனைச் சுண்ணம் என்றார் ஆசிரியர். இப்பொருள்கோள் அருகியல்லது வாராமையின் இதனை மொழிமாற்றினுள் அடக்கினார் பவணந்தியார். ஆதி பொருள் : சுண்ணம் என்பது செய்யுளினுற்ற இரண்டடி எட்டு சீர்களின் மொழிகளைத் தெரிந்தும் எடுத்தும் பொருத்தமான முறையில் இணைத்தும் பொருள் கோடல். |