பக்கம் எண் :

சுண்ணப் பொருள்கோள் சூ. 1063

இஃதே கொண்டு கூட்டு எனப்படும்.

உ-ம் :குயிலே அகவும் மயிலே சேவல்
 கூவும் கூவும் பெட்டை கொக்கரிக்குமே

இதுகுயிலே கூவும் எனப்பொருள் தருவது.

நிலத்தில் நீந்தலாம் நீரில் படுக்கலாம்
மரத்தில் பறக்கலாம் வானில் ஏறலாம்

நிலத்தில் படுக்கலாம் மரத்தில் ஏறலாம் எனக் கொண்டு கூட்டுகிறோம்.

சுப்

உரையாசிரியர் சேனாவரையர் நச்சினார்க்கினியர் இம் மூவரும்‘சுரையாழ அம்மி மிதப்ப’ என்பதனை மாத்திரம் இச்சூத்திரத்துக்கு உதாரணமாகக் கொடுத்தனர். தெய்வச்சிலையார் அதனோடு தெங்கங்காய்போலத் ............ சென்றார்வரின்’ என்பதனையும் உதாரணமாகக் காட்டினார். மேலும் சுரையாழ அம்மி மிதப்ப’ என்பது ‘நாற்சீர்க் கண்ணே துணித்து ஒட்டியது, என்றும் ‘தெங்கங்காய்’ என்பதனுள் எண்சீருள் ஒட்டி வந்தது’ என்றும் கூறினர். இதனை நோக்குமிடத்துச் சூத்திரத்திலுள்ள ‘ஈரடியெண்சீர், என்பதற்கு ஈரடிக்குரிய எண்சீர் என்பது பொருள் என்றும், ஒட்டுதல் எண்சீருக்குள் இருத்தல் வேண்டுமேயன்றி ஈரடி கொண்ட எண் சீருக்குள் இருத்தல் வேண்டும் என்ற நியதியில்லை யென்றும் தெய்வச்சிலையார் கருதினர் என்று தோன்றுகிறது. *

வை. தங்கமணி

*சுண்ணமாவது ஈரடி யெண்சீருள், எதிர் நிரல் நிறையாக வருவது. எனக்கூறி,


* ‘தெங்கங்காய்போல’ எனும் பாடற் சீர்களைத் தெய்வச்சிலையார் எண்சீரளவில் துணித்துக் கூட்டாமல் பல சீரளவில் கூட்டலாம் இக்கருத்து பொருந்தாது-சிவ.

* இவ்வுரையும் உதாரணமும் தங்கமணியவர்கள் பொருள்கோள் என்ற தலைப்பில் எனக்கு அனுப்பிவைத்த கட்டுரையிலிருந்து எழுதப்பட்டன.