பக்கம் எண் :

64தொல்காப்பியம்-உரைவளம்

உ-ம் :“களிறும் கந்தும் போல நளிகடற்
 கூம்பும் கலனுந் தோன்றும்
தோன்றல் மறந்தோர் துறை கெழு நாட்டே”

என்பதில் களிறும்போல் கலனும் கந்துபோல் கூம்பும் எனக் கூட்டுதல் வேண்டும் என்றும் கூறினார்.

“சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
கானக நாடன் சுனை”

என்பதில் ஓரடியுள்ளேயே சுரை மிதப்ப அம்மி ஆழ யானைக்கு நிலை முயற்கு நீத்து என முடிதலின் ஈரடியெண்சீர் என்றதற்கு மாறுபடுதலின் உரையாளர் காட்டும் சுரையாழ என்னும் உதாரணம் பொருந்தாது என்பர் வை. தங்கமணி*

அடிமறிப் பொருள்கோள்

401. அடிமறிச் செய்தி யடிநிலை திரிந்து
  சீர்நிலை திரியாது தடுமா றும்மே.       (11)
  
  (அடிமறிச் செய்தி அடிநிலை திரிந்து
சீர்நிலை திரியாது தடுமா றும்மே).

ஆ. மொ. இல.

‘Adimari’ is the mode in which the position
of the lines may be altered without
changing the place of the ‘Sirs’ (measured words)
and the lines may exchange places

பி. இ. நூ.

அடுத்த சூத்திரத்துக் காண்க.


* “களிறும் கந்தும் போல நளிகடற், கூம்பும் கலனுந் தோன்றும்” என்னும் அடிகளில் எண்சீர் இல்லாமையால் இவர் இவ்வுதாரணம் காட்டுவது பொருந்துமா எனக்கருதல் வேண்டும்-சிவ.