அடிமறிப் பொருள்கோள் சூ. 11 | 65 |
இளம் இச்சூத்திரத்தில் என்னுதலிற்றோவெனின், அடிமறிப் பொருள் கோளாமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை : அடிமறி என்று சொல்லப்படுவது சீர் கிடந்துழியே கிடப்ப, அடிகள் முதலும் இடையும் கடையும் படச்சொல்லிக் கண்டு கொள்க. சேனா இ-ள் : அடிமறிச் செய்யுளாவது சீர் நின்றாங்கு நிற்ப அடிகள் 1தத்த நிலையிற் றிரிந்து ஒன்றன் நிலைக்களத்து ஒன்று சென்று நிற்கும், எ-று. எனவே, எல்லா வடியும் யாண்டுஞ் செல்லும் என்பதாம். 2உ-ம் : | மாறாக் காதலர் மலைமறந் தனரே | | யாறாக் கட்பணி வரலா னாவே வேறா மென்றோள் வளைநெகி ழும்மே கூறாய் தோழி யான்வாழு மாறே. |
எனவரும். இதனுள் சீர் நின்றாங்கு நிற்பப் பொருள் சிதையாமல் எல்லாவடியுந் தடுமாறியவாறு கண்டு கொள்க. பெரும்பான்மையும் நாலடிச் செய்யுட்கண் அல்லது இப் பொருள்கோள் வாராதென்க. நிரனிறைதானே; சுண்ணந்தானே, மொழிமாற்றியற்கை என்பனபோல ஈண்டும் “அடிமறிச் செய்தி” யென்பதனைக் குறளடியாக்கி “அடி நிலை திரிந்து சீர்நிலை திரியாது தடுமா
1. தத்த நிலையிற்றிரிதலாவது வரிசையில் மாறுபடுதல். 2. பொருள் : தோழீ! நம்மிடம் அன்பு மாறாத் தலைவர் நம் மறந்தார்; அதனால் என் கண்ணீர் ஆறாக வருதல் ஒழியாது; என் மென்ற தோளிலிருந்து தனியாக வளை நெகிழும்; இனியான் வாழுமாறு கூறாய். |