றும்மே பொருள் தெரி மருங்கின்” என்று சூத்திரமாக 1அறுப்பாரும் உளர். தெய் அடிமறியமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : அடிமறி யென்பதன் செய்தி சீர்நிலை திரியாது அடிநிலைமை திரிந்து தடுமாறும், எ-று. உ-ம் : | சூரல் பம்பிய சிறுகான் யாறே | | சூரா மகளிர் ஆரணங்கினரே | | வாரல் எனினே யான்அஞ் சுவலே | | சாரல் நாடநீவர லாறே |
இது ‘சாரல்நாட ! நீவருகின்ற நெறி சூரல்பம்பிய சிறுகான்யாறு; சூரரமகளிர் வருத்தஞ்செய்வர்; வாராது ஒழியென யான் அஞ்சா நின்றேன்’ என அடிமாறிப் பொருளுணர்த்தியவாறு கண்டு கொள்க. அஃதேல் இதனை யாப்பிலக்கணத்துள் ஆராய்தல் வேண்டும். சொல் நிலை திரியாமையால் எனின், இது தொடர் மொழித் திரிபாகலான் ஈண்டுக் கூறப்பட்டது என்க. நச் இஃது அடிமறி யாமாறு கூறுகின்றது. இ-ள் : அடிமறிச் செய்தி - அடிமறி என்பதன் செய்தி, சீர்நிலை திரியாது அடிநிலை தடுமாறும்- சீர் நின்றாங்கு நிற்ப அடிகள் தத்தம் நிலையில் திரிந்து ஒன்றின் நிலைக்களத்து ஒன்று சென்று நிற்கும், எ-று. உ-ம் : | மாறாக் காதலர் மலைமறந் தனரே | | ஆறாக் கட்பணி வரலா னாவே வேறா மென்றோள் வளைநெகி ழும்மே கூறாய் தோழி யான்வாழு மாறே |
இது சீரும் பொருளும் திரியாது, அடி திரிந்தவாறு காண்க. இது நான்கடிச் செய்யுட்கல்லது பெரும்பான்மை வாராது.
1. ‘யார் என்பது தெரியவில்லை’ ‘பொருள் தெரி மருங்கின்’ என்பது அடுத்த சூத்திரத்தில் காணப்படுவது. |