பக்கம் எண் :

அடிமறிப் பொருள்கோள் சூ. 1167

வெள்

இஃது அடிமறியாமாறு கூறுகின்றது.

இ-ள் : அடிமறிச் செய்யுளாவது, சீர் நின்றாங்கு நிற்ப அடிகள் தத்தம் நிலையிற் றிரிந்து ஒன்றன் நிலைக்களத்து ஒன்று சென்று நிற்கும், எ-று.

சீர்கள் கிடந்துழியே கிடப்பச் செய்யுளின் அடிகள் முதலும் இடையும் கடையும் மறித்துப் பொருள் கொள்ளப்படுதலின் அடிமறி என்னும் பெயர்த்தாயிற்று.

உ-ம் :மாறாக் காதலர் மலைமறந் தனரே
 ஆறாக் கட்பணி வரலா னாவே
வேறா மென்றோள் வளைநெகி ழும்மே
கூறாய் தோழி யான்வாழு மாறே

எனவரும்.

ஆதி

உ-ம் :பூவெனப் படுவது தாமரைப் பூவே
 பழமெனப் படுவது தேமாம் பழமே
இலையெனப் படுவது வாழை யிலையே
நூல்எனப் படுவது முப்பால் நூலே
கவியெனப் படுவதுகம்பன் கவியே

இவற்றில் எந்த அடியை யெடுத்து எங்கு மாற்றினும் செய்யுளின் சீர் கெடுவதில்லை.

கள்ளருந் துவதே கருத்தை யழிக்கும்
காமம் பெரிய இழிகுணம் ஆகும்
களவு என்பது பிழைபடு நெறியாம்
கவறு என்பது தவறான செயலாம்
பொய்யனை எவரும் கையன் என்பரால்

அடிமாறினும் சீர்மாறுவதில்லை.