பக்கம் எண் :

68தொல்காப்பியம்-உரைவளம்

மேலதற்குப் புறனடை

402. பொருடெரி மருங்கி
 னீற்றடி யிறுசீ ரெருத்துவயின் 1றிரியுந்
 தோற்றமும் வரையா ரடிமறியான       (12)
  
 (பொருள் தெரி மருங்கின்
ஈற்றுஅடி இறுசீர் எருத்துவயின் திரியும்
தோற்றமும் வரையார் அடிமறி யான)

ஆ. மொ. இல.

When knowing the meaning of the stanza
it is not forbidden that the final ‘Sir’ of
the last line of the stanza may be
connected with the penullimate line of the stanza.

பி. இ. நூ :

(முன்சூத்திரத்தையும் நோக்கியது)

நன் 419

ஏற்புழி எடுத்துடன் கூட்டுறும் அடியவும்
யாப்பு ஈறு இடைமுதல் ஆக்கினும் பொருளிசை
மாட்சியும் மாறா அடியவும் அடிமறி

இ. வி 369

அடிமறிச் செய்தி அடிநிலை திரிந்து
சீர்நிலை திரியாது தடுமா றும்மே.

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், எய்தியது விலக்குதல் நுதலிற்று.

உரை : அடிமறிப் பொருள்கோள் ஆராயுமிடத்து, ஈற்றடியின் இறுதிச்சீர் எருத்தத்துச் சீராய்க்கிடந்தும் வரையப்படாது, எ-று.


1 றிரிபுந் - பாடம்.