மேலதற்குப் புறனடை சூ. 12 | 69 |
வ-று : | சூரல்பம்பிய சிறுகான் யாறே | | சூரர மகளிர் ஆரணங் கினரே சாரல் நாட 1நீவர லாறே வாரல் எனினே யானஞ் சுவலே |
என்புழி ‘அஞ்சுவல்யான்’ என இறுதிச்சீர் எருத்துவயிற்றிரிந்தவாறு கண்டு கொள்க. இவ்வாறுஎங்கும் மாற்றுக. சேனா இ-ள் : பொருளாராயுங்கால் அடிமறிச் செய்யுட்கண் ஈற்றடியது இறுதிச்சீர் எருத்தடியிற் சென்று திரிதலும் வரையார் எ-று. ‘சீர்நிலை திரியாது தடுமாறும்’ என்றாராகலின் சீர் நிலை திரிதலும் ஒருவழிக்கண்டு எய்தியது இகந்து படாமற்காத்தவாறு. இலக்கியம் வந்தவழிக் கண்டு கொள்க, எருத்துவயின் என்பதற்கு ஈற்றயற் சீர்வயின் என்று பொருளுரைத்து, சூரல் பம்பிய சிறுகான் யாறே சூரர மகளிர் ஆரணங் கினரே சாரல் நாட நீ வரு தீயே வாரல் எனினே யானஞ் சுவலே என்புழி ‘அஞ்சுவல்யான்’ என இறுதிச்சீர் ஈற்றயற் சீர்வயின் சென்று திரிந்த தென்று உதாரணம் காட்டினரால் உரையாசிரியர் எனின், ‘யானஞ்சுவல்’ என நின்றாங்கு றிற்பவும் பொருள் செல்லும் ஆதலின், இவ்வாறு திரிதல் பொருந்தாமையின் அவர்க்கு அது கருத்தன்றென்க. எல்லாவடியும் யாண்டுஞ் செல்லுமாயின் உரைப்போர் குறிப்பான் எருத்தென்றும் ஈற்றடியென்றும் கூறினார். உரைப்போர் குறிப்பின் உணர்வகை யன்றி இடைப்பான் முதலீ றென்றிவை தம்முள் மதிக்கப் படாதன மண்டலயாப்பே
1 நீ வரு தீயே சேனா - பாடம் |