பக்கம் எண் :

70தொல்காப்பியம்-உரைவளம்

என உரைப்போர்குறிப்பான் முதலும் இடையும் ஈறும் கோடல் 1பிறரும் கூறினார் என்பது.

தெய்

மேலதற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : பொருள் ஆராயும்வழி ஈற்றடிக்கண்வரும் இறுதிச் சீர் ஈற்றயலடிக்கண் திரிந்து பொருள்படும் நிலைமையும் நீக்கார், எ-று.

இவ்வாறு வருவதும் அடிமறி என்றவாறாம், உதாரணம் வந்தவழிக் கண்டு கொள்க.

நச்

இது மேலதற்கோர் புறனடை

இ-ள் : அடிமறியான - அடிமறிச் செய்யுளிடத்து, பொருள் தெரிமருங்கின் -பொருள்முடிவை ஆராயுமிடத்து, ஈற்று அடி-அப்பொருள் முடிவினையுடைய அடியில், எருத்துவயின் இறுசீர் - முடிக்கின்ற சீர்க்கு முதற்சீரிடத்துப் பொருளே தன் பொருளாய் இறும்சீர், திரியும் தோற்றமும் வரையார் - ஏனையடிகள்போல் நேராய் முடியாது மீண்டும் சென்று முன்நின்றதோர் சொல்லோடே பொருள் முடியும் தோற்றரவும் நீக்கார் ஆசிரியர், எ-று.

‘கூறாய் தோழி யான்வாழு மாறே’

என்பது, யாண்டு நிற்பினும் பாட்டில் பொருள் முடிக்கின்ற அடி முதல் ‘வாழும்’ என்பது எருத்துச்சீர். ‘மாறு’ என்னும் இடைச்சொல்லாகிய இறுதிச்சீர்தான் பிரிந்து நின்று உணர்த்துதற்குத் தனக்கு ஒர் பொருள் இன்றி ‘வாழும்படியை’ என எருத்துச்சீரின் பொருளையே யுணர்த்தி,உருபையேற்றுக் ‘கூறாய்’ என முன் நின்ற சொல்லோடு முடிந்தவாறு காண்க.

உம்மையான், இங்ஙனம் முடிதல் சிறுபான்மை ஆயிற்று.


1 பிறர் - காக்கைபாடினியார்