பக்கம் எண் :

மேலதற்குப் புறனடை சூ. 1271

வெள்

இது மேலதற் கோர்புறனடை

இ-ள் : பொருள் ஆராயுங்கால், அடிமறிச் செய்யுட்கண், ஈற்றடியது இறுதிச்சீர் ஈற்றயற்சீர்வயின் சென்று திரிந்து நிற்றலும் நீக்கார் ஆசிரியர், எ-று.

மேற் சூத்திரத்தில் ‘சீர் நிலை திரியாது தடுமாறும்’ என்றார், ஈண்டு ஒரோவழிச் சீர்நிலை திரிதலும் உண்டு எனத் தழுவினார். எருத்து - ஈற்றின் அயல்; ஈண்டு ஈற்றயற் சீரைக் குறித்தது. ஈற்றடியென அடியைக் குறித்த ஆசிரியர் ‘எருத்தடி’ என்னாது ‘எருத்து‘ எனப் பொதுபடக் குறித்தலின் எருத்து என்பது ஈற்றடியின் எருத்தாகிய ஈற்றயற் சீரைக் குறித்ததெனக் கொண்டார் இளம் பூரணர்.

வ-று :சூரல்பம்பிய சிறுகான் யாறே
 சூரர மகளிர் ஆரணங் கினரே
சாரல் நாட நீவர லாறே
வாரல் எனினே யானஞ் சுவலே

என்புழி ‘அஞ்சுவல்’ என்னும் இறுதிச்சீர் ‘யான்’ என்னும் ஈற்றயற் சீராய எருத்துவயிற் சென்று ‘அஞ்சுவல்யானே’ எனத்திரிந்து நின்றவாறு கண்டு கொள்க.

இதன்கண் ‘எருத்து’ என்பதற்கு ‘எருத்தடி’ எனப்பொருள் கொண்ட சேனாவரையர், தாம் கூறுமாறு ஈற்றடி இறுதிச்சீர் எருத்தடியிற்சென்று திரிதற்கு இலக்கியம் காணாது ‘இலக்கியம் வந்தவழிக் கண்டு கொள்க, என உதாரணம் காட்டாது சென்றமையைக் கூர்ந்து நோக்குங்கால், இச்சூத்திரத்திற்கு இளம்பூரணர் கூறிய பொருளே தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடைய தென்பது உய்த்துணரப்படும்.

அடிமறிச் செய்யுளில் எல்லாவடியும் யாண்டும் செல்லுமாயினும் உரைப்போர் குறிப்பின் வழி அச்செய்யுளின் ஈற்றடியாக் குறிக்கத்தகும் அடியுண்மையால் ஈற்றடி எனக்குறித்தார் ஆசிரியர்.