உரைப்போர் குறிப்பின் உணர்வகை யன்றி இடைப்பால் முதல் ஈறு என்றிவை தம்முள் மதிக்கப் படாதன மண்டில யாப்பே என்றார் பிறரும். ஆதி அடிமறியின் பொருள் - செய்யுளின் ஈற்றடியின் ஈற்றுச்சீர் அதற்கு அடுத்த சீரில் உற்று இடம்மாறி வரும்இயல்பையும் கடிவதற்கில்லை. எருத்து-கழுத்து உ-ம் : | வள்ளுவர் வழுவிலா முப்பால் எழுதினார் | | வில்லி பாரதம் விரிவாய் விளக்கினார் அருண கிரியார் திருப்புகழ் உரைத்தனர் சயங்கொண் டாரே பரணி பாடினார் அண்ணா மலையர் சிந்துநன் கிசைத்தார் சுப்பிர தீபர் நற்பதம் பாடினார் எல்லாம் இசைப்பவர் ஆவர் கம்பரே |
ஈற்றுச்சீர் ‘கம்பர்’ எருத்தம ‘ஆவர்’. இவை இடம்மாற ‘எல்லாம் இசைப்பவர் கம்பரே ஆவர்’ என நிற்பினும் குற்றமன்று. அடிதொறும் பொருள் நிறைவுற்று, யாண்டு மாறினும் பொருள் சிதையா நிலை பெறவேண்டும். அடிமாறி சீர் மாறலாம் என்ற கருத்துக்கொண்டே முந்திய சீர்நிலை திரியாது என்பதற்குப் பாட்டின் சிறப்புக்கெடா முறையில் எனப் பொருள் சொல்லப்பட்டது. சுப் இச்சூத்திரத்திலுள்ள ‘ஈற்றடி யிறுசீர் எருத்துவயின்’ என்பதற்கு உரையாசிரியர், ‘ஈற்றடியின் இறுதிச்சீர் எருத்துச் சீர்வயின்’ என்றும், சேனா வரையரும் தெய்வச்சிலையாரும் ‘ஈற்றடியது இறுதிச்சீர் எருத்தடியிற் சென்று’ என்றும், நச்சினார்க்கினியார் ‘ஈற்றடி யெருத்துப் பொருளே தன் பொருளாக்கொண்ட இறுதிச்சீர் என்றும் பொருள் கொண்டமை கவனிக்கத்தக்கது. இச்சூத்திரம் ‘அடிமறிச் செய்தி அடிநிலை திரிந்து-சீர் நிலை திரியாது தடுமாறும்மே’ என்ற முற்சூத்திரத்தில் உணர்த்தப்பட்ட அடிமறியின் வேறு வகையைக் கூறுதலின் |