பக்கம் எண் :

மேலதற்குப் புறனடை சூ. 1273

சேனாவரையர், தெய்வச்சிலையார் இருவருங் கூறும் பொருளே சிறந்தது. ஆகவே ‘யானஞ்சுவல்’ என நின் நாங்கு நிற்பவும் பொருள் செல்லுமாகலின் இவ்வாறு திரிதல் பொருத்தமின்மையின் அவர்களது கருத்தன் றென்க என்று’ சேனாவரையர் உரையாசிரியரை மறுப்பது பொருந்தும்.

நச்சினார்க்கினியர் ‘கூறாய் தோழியான் வாழுமாறே’ என்னுமிடத்து ‘மாறு’ என்னும் இடைச்சொல் தனக்கோர் பொருளின்றி ‘வாழும்படியை யென எருத்துச்சீரின் பொருளையே யுணர்த்திற்று’ என்றார், ‘மாறு’ என்பது ‘அனையை யாகன் மாறே’ (புறம். 20), ‘நீதுஞ்சாய் மாறே’ (புறம். 22) ‘நீ அருளன் மாறே’ (புறம். 92) முதலிய இடங்களில் ஏதுப் பொருளில் வருதலின் அதற்குப் பொருளில்லை யென்று கூறுவது எவ்வாறு பொருந்தும்?*

சிவ

‘அடிமறிச் செய்தியின்’ என்னுஞ் சூத்திரமும் இச்சூத்திரமும் அடிமறிப் பொருள்கோள் பற்றியன. அடிமறிப் பொருள்கோள் செய்யுளானது சீர்கள் நின்ற இடத்தே நிற்ப அடிகள் மட்டும் எவ்வடியும் எவ்வடியிடத்தும் மாற்றி வைக்கும் படி அமைவது. மாற்றி வைப்பதால் பொருள் கெடாது. இதற்கு உதாரணம் “சூரல் பம்பிய சிறுகான் யாறே” என்னும் பாடல். இதனால் அடிமறிச் செய்யுளில் அடிநிலை திரியும் என்பதும் சீர்நிலை திரியாது என்பதும் பெறப்பட்டது.

சீர்நிலை திரிந்தும் அடிமறிப் பொருள்கோட் செய்யுள் வரும் என்பது பொருள் தெரிமருங்கின் என்னும் சூத்திரத்தில் கூறப்பட்ட செய்தி. அவ்வாறு சீர்திரிவது பற்றி மூவகைக் கருத்து உண்டு.

1. ஈற்றடியின் இறுதிச்சீர் அதன் அயற்சீர்க்கு முன்னர் நின்று பொருளமைதிப் படுவது என்பது இளம்பூரணர் கோட்பாடு, ‘சாரல்நாட யானஞ் சுவலே’ என்னும் அடியில் அஞ்சுவல்


* ‘யான் வாழுமாறே’ என்ற விடத்துமாறு என்னும் இடைச் சொற்குப் பொருள் இல்லை என்றாறே தவிர மாறு என்னும் சொற்கே பொருள் இல்லை என்றாரல்லர் நச்சினார்க்கினியர்.