பக்கம் எண் :

மேலதற்குப் புறனடை சூ. 1275

சீர்நிலைதிரிதல் திரியாமை என்பன பொருளைப் பற்றியனவல்ல. சொல்லைப் பற்றியனவே. ‘கூறாய் தோழியான் மாறு வாழ’ எனச்சீர் மாறிவருதல் இல்லை. அதனால் நச்சினார்க்கினியர் கருத்து ஏற்பதற்கில்லை.

இனிச் சேனாவரையர் கருத்தையே நாம் ஏற்கலாம். அதற்குதாரணமாகப் பின்வரும் பாடலைக் காட்டலாம்.

திருவுறு மனைவி சிறக்க நாளும்
மருவுறு மக்கள் மாண்புடன் வளர்க
பொருவறு நல்லறம் பொலிக
மருவுறு மனையறம் வாழிய நன்றே.

இப்பாடலில் ‘மருவுறு மனையறம் வாழிய’ எனஒரு கருத்து முடிய நன்றே என்பது தனித்தது. அதனை ‘பொருவறு நல்லறம் பொலிக நன்றே’ எனக் கூட்டிப் பொருள் கொள்க. இப்பாடலில் முதல் இரண்டடிகளை முன்னும் பின்னும் மறிக்கலாம். இறுதி யிரண்டடிகளை மறிக்க இயலாது. ஆனால் பொருளளவில் நான்கு வரிக் கருத்துகளையும் மாறி மாறிக் கூறலாம்.

மொழி மாற்றுப் பொருள்கோள்

403. மொழிமாற் றியற்கை
 சொன்னிலை மாற்றிப் பொருளெதி ரியைய
முன்னும் பின்னுங் கொள்வழிக் கொளாஅல்       (13)
  
  (மொழி மாற்று இயற்கை
சொல் நிலை மாற்றிப் பொருள்எதிர் இயைய
முன்னும் பின்னும் கொள்வழிக் கொளாஅல்)

ஆ. மொ. இல.

The mode of ‘Molimarru’ is changing the
position of words to bring out the correct
meaning of the stanza and placing
them before and after as need be.