பக்கம் எண் :

மொழி மாற்றுப் பொருள்கோள் சூ. 1377

உள்ளூர் உள்ளதாகிய அலர் ஆரியமன்னர் பாறையின் எழுந்தியம்பும் எனவும், முன்னும் பின்னும் கொள்வழி யறிந்து கொளுவப் பொருள் எதிர் இயைந்தவாறு கண்டு கொள்க. மொழிமாற்று நின்று ஒன்றற் கொன்று 2செவ்வாமை கேட்டார் கூங்டியுணரு மாற்றாற் 3கடாவல் வேண்டும். அல்லாக்கால், 4அவாய் நிலையும் தகுதியும் உடைய வேனும் அண்மையாகிய காரணம் இன்மையாற் சொற்கள் தம்முள் இயையாவாம் என்க.

தெய்

மொழிமாற்று உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : மொழி மாற்றினது இயல்பு சொல் நின்ற நிலைமை மாற்றி முன்னும் பின்னும் பொருள் இயைய ஏற்கும்வழிக்கொளுவுதல், எ-று.

மேல், அடிமறி மொழிமாற்றென ஓதினமையானும், சுண்ணமொழிமாற்று ஈரடியெண்சீரென ஓதுதலானும், ஈண்டுச் சொன்னிலை மாற்றியெனப் பொதுப்பட வோதினமையானும் ஓரடிக்கண் நின்ற சொல்லை அவ்வடிக்கண்ணும் பிறவடிக்கண்ணும் முன்பாயினும் பின்பாயினும் ஏற்கும்வழிக் கொளுவப் பெறும், எ-று.

பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அந்நா லைந்தும் மூன்றுதலை யிட்ட
முன்னுறக் கிளந்த உயர்திணை யவ்வே       (தொல். சொல். வினை 11)

என்றவழி ‘மூன்றுதலையிட்ட அந்நாலைந்து’ என ஓரடிக்கண் மொழிமாறி நின்றது. ‘ஆலத்துமேல குவளை குளத்துள, வாலின் நெடிய குரங்கு’ என்ற வழி குரங்கு ஆலத்து மேல, எனப் பிற அடிக்கண் மொழிமாறி நின்றது. பிறவும் அன்ன.


2. செவ்வாமை - நிலைவரு மொழிகளாய் இயையாமை

3. கடாவல் - சொற்களைச் செலுத்துதல்

4. அவாய் நிலை - ஒருசொல் ஒருசொல்லை அவாவிநிற்றல், தகுதி - ஒரு சொல் தான் கொண்டு முடியும் சொல் தனக்குத் தகுதியாதல். அண்மை - நிலைவருமொழியென அணிமையில் நிற்றல்.