பக்கம் எண் :

மொழி மாற்றுப் பொருள்கோள் சூ. 1379

“இரும்பு திரித்தன்ன 3மாயிரு மருப்பிற்
பரல்அவல் அடைய இரலை தெரிப்ப”       (அகம். 4)

என்பதும் அது.

*‘பொன்னோடைப் புகரணிறுதல்
துன்னருந்திறல் கமழ்கடாஅத்து
எயிறுபடையாக வெயிற்கத விடாஅக்
கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கிற்
பெருங்கை யானை யிரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத் தருந்தொழில் சாவா’       (புறம். 3)

என்றாற்போல வருவன எல்லாம் 4‘அணுசிவந்த மாட்டு’ என்னும் உறுப்பு.

‘ஆரிய மன்னர் பறையின் எழுந்தியம்பும்’ (யா. வி. 95 உரை மேற்) என்பதும் அது.

5‘அகன்றுவந்தமாட்டு’ முருகாற்றுப்படை முதலியவற்றுட் காண்க.

மொழிமாற்றாவது, கேட்டோர் கூட்டி உணருமாற்றான் ஈரடிக்கண்ணே வருவது என்றும், ‘மாட்டு’ என்னும் உறுப்பாவது, இரண்டிறந்த பலவடிக்கண்ணும் பல செய்யுட்டொடரின்கண்ணும் அகன்றும் அணுகியும் வரும் என்றும் உணர்க. அஃது,


3. இருமா என மாறுக

* பொருள் : பொன்னாலாகிய பட்டத்தையும் புள்ளிகளையும் உடைய அழகிய நெற்றியையும், நெருங்க அரிய திறலையும், மணநாறும் மதநீரையும், கயிற்றாற் கட்டப்பட்ட கவிழ்ந்த மணிகளையுடைய இருபக்கங்களையும், பெரிய கையையும் உடைய-பல்லே படையாகக் கொண்டு மதில் கதவை விட்டு நீங்காத யானையது பெரிய பிடர்த்தலையில் இருந்து.

4. அணுகிவந்தமாட்டு=அணிமைக்கண்வந்த கொண்டு கூட்டு.

5. அகன்றுவந்தமாட்டு-நெடுந்தொலைவில் சென்று பொருள் கொள்ளும் கொண்டு கூட்டு.