‘அகன்று பொருள்கிடப்பினும் அணுகிய நிலையினும் இயன்று பொருள் முடியத் தந்தனர் உணர்த்தல் மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின்’ (செய். 210) என்னும் செய்யுளியற் சூத்திரத்தான் உணர்க. உதாரணங்கள் ஆண்டுக் காட்டுதும், பூட்டுவிற் பொருள்கோளும், அளைமறி பாப்புப் பொருள்கோளும் தாப்பிசைப் பொருள்கோளும் கொண்டு கூட்டுப் பொருள்கோளும் ‘மாட்டு’ என்னும் உறுப்பின்கண் அடங்குமாறும், யாற்றொழுக்குப் பொருள்கோள் ‘யாப்பு’ என்னும் உறுப்பின்கண் அடங்குமாறும் உணர்க. வெள் இது மொழி மாற்றாமாறு கூறுகின்றது. இ-ள் : மொழிமாற்றினது இயல்பாவது பொருள் எதிர்இயையுமாறு நின்ற சொல்லை இடம் மாற்றி முன்னும் பின்னும்பொருள் கொள்ளுமிடம் அறிந்து பொருத்துதலாகும், எ-று. கொளாஅல்-கொளுவுதல் பொருத்துதல். உ-ம் : | குன்றத்து மேல குவளை குளத்துள | | பாரி பறம்பின்மேற் றண்ணுமை-காரி். |
எனவரும். இதனைக் ‘குவளை குளத்துள், செங்கோடு வேரி மலர் குன்றத்துமேல’ என மொழிமாற்றுக. ஆதி பொருள் : நன்கு பொருந்துமாறு சீர்களின் சொற்களை மாற்றி முன்னும் பின்னுமாகத் தக்க வழியில் அமைத்துக் கொள்ளுதல் மொழிமாற்று. *‘இராமனே இலங்கை மன்னன் இராவணன் அயோத்தி மன்னன் பொராவரும் போர்கள் செய்து தம்புகழ் நிறுவி யுள்ளார்
* இப்படியாரும் செய்யுள் செய்ய மாட்டார். உதாரணத்துக்காகக் காட்டியது. இது ‘சுரை யாழ அம்மி மிதப்ப’ என்பது போலவேயாம். ஆனால் ஈரடி யெண் சீராக இல்லையாதலின் இப்படிக் காட்டினார் போலும். |