பக்கம் எண் :

மொழி மாற்றுப் பொருள்கோள் சூ. 1381

இங்கு அயோத்தியை இராமனுடன் சேரும்படி மொழிமாற்றம் செய்யவேண்டும். அவ்வாறே இலங்கை இராவணனுடன் சேர மொழி மாற்றம் செய்தல் வேண்டும்.

குறிப்பு : *மொழிமாற்றுக்கோ, சுண்ணத்துக்கோ ‘சுரையாழ அம்மி மிதப்ப’ யானைக்கு நீத்து முயலுக்கு நிலை’ என்ற உரையாசிரியர்களின் எடுத்துக்காட்டு தவறு. இது மொழிமாற்றிப் பொருள்தர வேண்டிய இடம் அன்று. இறைச்சிப் பொருளாகத் தலைவி ஊடலில் தலைவனைக் கடிகின்றாள். இவனுக்கு எல்லாம் நேர்மாறுதான். நல்லவர் கெட்டவராகத் தெரியும்; கெட்டவர் நல்லவராகத் தெரியும்” என்பது. ‘மனைவி கசப்பாள் மற்றவள் இனிப்பாள்’ என்று இடித்துரைக்கும் உரையிது.

மற்றொன்று : செய்யுளுக்குப் பொருள் கொள்ளும் முறையிது. இதனைச் செய்யுளியலில் அமைக்கலாம். ஆசிரியர் சொல்லதிகாரத்தில் எச்சவியலில் அமைத்தது அத்துணைச் சிறப்புடைத்தன்று. அவ்வாறே பொருளதிகார மரபியல் சொல்லதிகாரத்தில் வரவேண்டிய ஒன்று. அதனைப் பொருளதிகாரத்தில் அமைத்ததும் சிறப்புடைத்தன்று; வழுவே.

சொல்வகை, விகாரம், பொருள்கோள் பற்றிக் கூறிய ஆசிரியர் இனித் தனித்தனிச் செய்திகள் தருகின்றார்.

வை. தங்கமணி

* மொழிமாற்றினைப் பற்றிப்பேசும் ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியருக்கும், பல்கலைக் குரிசில் பவணந்தியாருக்கும் ஒரு சிறு வேறுபாடு. என்னவென்றால், நன்னூலார் ஓரடியுள் மாற்றுதல் என்பர். காப்பியர் ‘முன்னும் பின்னும் கொள்வழி என்பர். முன்னும் பின்னும் என்றால் பல அடிகளிலும் இருக்கும் சொற்களைப் பொருள் இயைய முன்னும் பின்னும் கொள்வதா? அல்லது, ஓரடியுள் இருக்கும் சொற்களைப் பொருள் இயைய முன்னும் பின்னும் கொள்வதா? என்றால்-பலவடிகளில் இருக்கும் சொற்களைப் பொருளுக்கியைய முன்னும் பின்னும் பொருள் பொருத்தமுறப் பொருத்திப் பொருள் கொள்வோமேயானால் கொண்டு கூட்டுக்கும், மொழி


* இக்கருத்து கே. குஞ்சிதபாதனாரால் செந்தமிழ்ச் செல்வி சிலம்பு பரல் - ல் எழுதப்பட்டுள்ளது.

* பொருள்கோள் என்னும் தலைப்பில் எனக்கு அனுப்பி வைத்த கட்டுரையிலிருந்து எடுத்து எழுதப்பட்டது.