மாற்றுக்கும் வேறுபாடு இல்லாதுபோய் விடும். ஆகையால் மொழி மாற்றானது அண்மையில் இருக்கும் மொழியை முன்னும் பின்னும் மாற்றுதல்-அதாவது ஓரடியுள் மாற்றுவது என்று மொழிமாற்றுக்கும் கொள்வோமேயானால் நன்னூலார் எண்ணமும் காப்பியர் கூற்றும் ஒன்றாம் என்பது அங்கை நெல்லிக்கனிபோலப் புலனாம்* பிரிக்கப்படாக் கிளைநுதற் பெயர்கள் 404. | தநநு வெவெனு மவைமுத லாகிய | | கிளைநுதற் பெயரும் பிரிப்பப் பிரியா (14) | | | | (தநநு எ எனும் அவைமுதல் ஆகிய கிளைநுதல் பெயரும் பிரிப்பப் பிரியா) |
ஆ. மொ. இல. The nouns which denote relationship, having ‘tha’, ‘na’, ‘nu’, and ‘e’ as initials cannot be split into parts. இளம் இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், ஐய மறுத்தல் நுதலிற்று. உரை : த ந நு எ எனச் சொல்லப்பட்ட நான்கு எழுத்தினையும் முதலாகவும், ன ள ர என்னும் மூன்று எழுத்தினையும் ஈறாகவும் உடையவாகிய தொடர்ச்சிக் கிழமை கருதிவரும் பெயரவற்றைப் பிரித்து இடையறுத்து
* தொல்காப்பியர் கொண்டுகூட்டு என்ற பொருள்கோளை மொழிமாற்றில் அடக்கிக் கூறிவிட்டபடியால் மொழி மாற்றே கொண்டுகூட்டு என்பது அவர்கருத்தாகக் கொள்ளப்படும். அதனால் நன்னூலார் மொழி மாற்றுவேறு கொண்டுகூட்டு வேறு எனக்கொண்டு கூறியதை இங்குக் காட்ட வேண்டுவதில்லை. இருவர் கருத்தும் ஒன்றே என்னவும் தேவையில்லை-சிவ. |