பக்கம் எண் :

பிரிக்கப்படாக் கிளைநுதற் பெயர்கள் சூ. 1483

உணர லாங்கொல்லோ எனின், அவை பிரிப்பப் பிரியா; நன்ற வாற்றானே நின்று பொருள்படினன்றி என்பது.

வ-று : 1தமன், தமள், தமர்; நமன், நமள், நமர்;
 நுமன், நுமள், நுமர்; எமன், எமள், எமர்

எனவரும்.

உம்மையாற் பிறவும் பிரிப்பப் பிரியா தனவுள; அவை : தாய், ஞாய், யாய் எனவரும். 2வில்லி, வாளி எனவும் பிறவும் அவ்வாறு வருவன பிரிப்பப் பிரியா என்று கொள்க. இவை 3ஒட்டுச் சொற்பொருளோடு நிற்பன என்றும், இவற்றை ஒரு சொல் அன்று என்றும் மயங்கற்க; ஒரு சொல்லே என்பது கருத்து.

சேனா

செய்யுட்குரிய சொல்லும், சொற்றொடுக்குங் காற்படும் விகாரமும், அவை செய்யுளாக்குங்காற் றம்முட்புணர்ந்து நிற்குமாறுமாகிய செய்யுளொழிபு உணர்த்தி, இனி வழக்கிலக்கணத்தொழிபு கூறுகின்றார்.

இ-ள் : த ந நு எ என்பனவற்றை முதலாக வுடைய வாய்க் கிளைமை நுதலி வரும் பெயரும் பிரிக்கப்படா’ எ-று.

அவையாவன : தமன், தமள், தமர்; நமன், நமள், நமர்; நுமன், நுமள், முநர்; எமன், எமள், எமர்; தம்மான், தம்மாள், தம்மார்; நம்மான், நம்மாள், நம்மார்; நும்மான், நும்மாள், நும்மார்; எம்மான், எம்மாள், எம்மார் என வரும்.

உமையாற் பிற கிளைநுதற் பெயரும் பிரிக்கப் பிரியா வென்பதாம். அவை; தாய், ஞாய், தந்தை, தன்னை என்னுந் தொடக்கத்தன.


1. இவை பிரிப்பப் பிரியாமையைச் சேனாவரையர் விளக்கத்தால் அறிக.

2. வில்லி, வாளி என்பன ஓர் இனத்தாரைக் குறிப்பன வில்லையுடையவன், வாளையுடையவன் எனின் வில் + இ, வாள் + இ எனப்பிரிக்கப்படும்.

3. ஒட்டுச்சொற்கள் - விகுதி முதலியன.