பிரிக்கப்படாக் கிளைநுதற் பெயர்கள் சூ. 14 | 85 |
வேண்டுதலான், எழுத்தானும் பொருளானும் வேறுபாடின்மையின் ஒரு சொல்லெனவேபடும்; இரண்டு சொல் என்றல் நிரம்பாமையின், அவ்வாறு பிரித்தலும் பொருத்தம் இன்று என்பது 3கிளைநுதற்பெயர் விளிமரபின்கட் பெறப்பட்டமையாற் பெயரியலுள் உணர்த்தாராயினார். அதனான் ஆண்டியைபுபட்டின்றாகலின் பிரிப்பப் பிரியா ஒரு சொல்லடுக்கோடியைய இதனை ஈண்டு வைத்தார். தெய் ஒட்டுப்பெயர்க்கு உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : தநநுஎ என்னும் இவை முதலாகியவும், கிளையை நுதலிய பெயரும் பொருள் நிலையாற்பிரிக்க நினைக்கின் பிரிந்து பொருள்படா. ஒட்டிநின்றே பொருள்படும், எ-று. ஆகியும் என்னும் உம்மை தொக்கு நின்றது. தநநுஎ என்னும் அவை முதலாகியவாவன : தான், தாம், நாம், யாம், யான், நீ, நீர், நீயிர் என மூன்றிடத்துப் பெயர்களும், ஆறாம் வேற்றுமைக் கிழமைப் பொருள்குறித்து, முன்னிலை குறுகியும் திரிந்தும் வந்து கிழமைப்பொருள் உணர்த்துஞ் சொல்லின் ஈற்றெழுத்தோடு ஒட்டி நின்று தமன், தமள், தமர், தமது, தம எனப்படர்க்கையினும்; நுமன், நுமள், நுமர், நுமது, நும என முன்னிலையினும்; நமன், நமள், நமர், நமது, நம, எமன், எமள், எமர், எமது, எம எனத்தன்மையிலும் வரும்.
3. கிளை நுதற்பெயர்கள் யாவை என்பதும் அவை விளியேலா என்பதும் விளிமரபில் (சூ. 37) பெறப்பட்டன. அதனால் அவை பெயரியலில் பெயர்களைக் கூறும் இடத்தில் கூறப்படவில்லை. இச்சூத்திரக் கருத்தை விளிமரபிலேயே கூறிவிடலாமே யெனின் ஆண்டு விளியேற்பன ஏலாதன மட்டும் கூறப்படுதலின் பிரிப்பப் பிரியாமையாகிய இலக்கணம் கூறப்படவில்லை. காரணம் யாதும் இயைபுஇன்மையே. அதனால் ஈண்டுக் கூறினார். |