கிளை நுதற்பெயராவன : இம்மூன்றிடத்தும் ஒட்டுப்பட்ட பெயர்கள், ஆறாம் வேற்றுமை முறைமையைக் குறித்து மேற்சொல்லியவாற்றான் தந்தை, நுந்தை, எந்தை எனவும்; தாய், ஞாய், யாய் எனவும்; தம்முன், நும்முன், எம்முன் எனவும்; தம்பி, நும்பி, எம்பி எனவும் முதல்வனையும் ஈன்றாளையும் முன்பிறந்தானையும் பின்பிறந்தானையும் உணர்த்தும் பன்மைச் சொற்கள் எல்லாம் பொருள் முகத்தாற் றம்மையும் பிறரையும் உணர்த்துவன. இச்சொற்கள் எல்லாம் ஏனைய போலப் பிரிக்கப் படா; ஒட்டி நின்றே பொருள்படும் என்றவாறு. வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனால், 2காரணப் பெயராகிவரும் தொழிற்பெயரும், உடையபெயரும், பண்புப் பெயர், முதலாயினவும் பிரிப்பப் பிரியா வென்று கொள்க. பிறன், பிறள், பிறர் என்பவோ வெனின் அவை ஒட்டுப் பெயரல்ல வென்க. நச் இதுமேல் தொகைச் சொற்கூறுவான், தொகைபோல இரு பொருள்படுவன இவை என்கின்றது. இ-ள் : தநநுஎ எனும் அவை முதலாகிய கிளைநுதல் பெயரும் தநநுஎ என்கின்ற எழுத்துக்களை முதலாகவுடைய ஒருவரோடு ஒருவர்க்குள்ள தொடர்ச்சிக் கிழமையைக் கருதின ஒட்டுப் பெயர்களும், பிரிப்பப் பிரியா-தொகைச் சொற்போல இருபொருள்பட்டு நிற்பினும் அவைபோலப் பின்வருஞ் சொல் தம்பொருள் உணர்த்தாமையின் பிரிக்கப்படா, ஒருசொல்லேயாய் நிற்கும், எ-று. உ-ம் : | தமன், தமன், தமர் | | நமன், நமள், நமர் நுமன், நுமள், நுமர் எமன், எமள், எமர் |
எனவரும். விளிமரபில் முதலும் ஈறும்பற்றி ஓதி இடையின் விகற்பங் கூறாமையின், தம்மான், நம்மான், நும்மான், எம்மான் என்றாற்போலும் வாய்பாட்டு விகற்பமும் கொள்க.
1. தொழிற்பெயர் - உண்ணல், உடைப்பெயர் பொன்னன், பண்புப்பெயர் கரியன். |