பக்கம் எண் :

பிரிக்கப்படாக் கிளைநுதற் பெயர்கள் சூ. 1489

ஆதி

த ந நு எ - இவற்றை முதல் எழுத்தாக் கொண்ட கிளைப் பெயர்கள் பிரிக்கப்படா.

தமன், தமன், தமர்
நமன், நமள், நமர்
நுமன், நுமள், நுமர்
எமன், எமள், எமர்

இவற்றைத் தம், நம், நும், எம் என நிலை மொழி கொண்டு பிரித்தலாகாது.

ஆய்வு : இச்சொற்கள் தாம், நாம், நீர், யாம் என்னும் முதல் நிலையுடன் அன், அள், அர் விகுதி பெற்று வந்தவை என்று கூறின் இழுக்கு என்னை?

தாமென் கிளவி (பெய. 30), நீயிர் நீ என வருங் கிளவி’ (பெய. 34), ‘யாம் நாம் எனவரும் பெயரும்’ (பெய. 8 ) இவற்றால் தாம், நாம், நீர், யாம் என்ற சொற்களுக்கு ஆசிரியர் இடந்தருகின்றார். இவை பிறசொற் சேர்க்கையின் தம், நம், நும், எம் எனத்திரியும் என்று கூறுதலே நேரிய முறை. பிரிப்பப்பிரியா என்பது முறை கேடே.

சுப்

இச்சூத்திரத்திற்குச் சேனாவரையர் தமன், நமன் முதலியவற்றை உதாரணமாகக் கூறாது தம்பி, தங்கை முதலியவற்றை உதாரணமாகக் கூறுதல் மிகவும் ஏற்புடைத்தாகும். ஏன் எனில் தம்பி தங்கை என்னுமிடத்து, பி. கை இவை எவற்றைக் குறிப்பன என்பதைக் கூறுவது ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தே இயலாத தாயிற்று என்னலாம்.

சிவ

தமன் தமள் முதலியன பிரிப்பப் பிரியா என்றதற்கு விளக்கம்.

வெற்பன் என்பதை வெற்பு + அன் எனப்பிரிக்கலாம். வெற்பையுடையவன் என்னும் பொருள் தரும் அது. வெற்பு