என்னும் பகுதி மலையையும் அன் என்னும் விகுதி ஆண் பாலையும் தரும். தமன் என்பது தம் கிளை அல்லது தன்கிளை என்னும் பொருளது. ஒருமை பன்மைகளுக்குப் பொதுவான சொல் அது. அதனால் அதனைப் பிரித்தல் கூடாது. இது ஒரு கொள்கை. தமன் என்பதற்குத் தன் அல்லது தம் கிளைஞன் என்பது பொருள். இதை, தம் + அன் எனப்பிரித்தால் அன் என்பது ஆண்பாலைக்குறிக்கும் தம் என்பது கிளை என்னும் பொருளைக் குறியாது. ஆனால் தமன் என்பது தன் அல்லது தம் கிளை என்னும் பொருளைக் குறிக்கும் போது ‘ன்’ என்பது நோக்கி ஆண்பால் என்னலாம். தமள் என்பதில் ‘ள்’ என்பதை நோக்கிப் பெண்பால் என்னலாம் அவ்வளவே. பகுதி விகுதியாகப் பிரித்தால் பகுதிக்குத்தனிப் பொருள் இல்லை. அதனால்தான் தமன் என்பது பிரிப்பப் பிரியாது பிறவும் அன்ன இது ஒருவகை. இவ்வகையான விளக்கங்களையும் கொள்ளலாம். ஒரு சொல் அடுக்கு 405. | *இசைநிறை யசை நிலை பொருளொடு புணர்தலென் | | றவைமூன் றென்ப வொருசொல் லடுக்கே (15) | | | | (இசைநிறை அசைநிலை பொருளொடு புணர்தல் என்று அவை மூன்று என்ப ஒருசொல் அடுக்கே |
ஆ. மொ. இல. ‘Isanirai’ (making sweet melody) ‘asainilai’ (making syllable), ‘Porulodu punarthal (making variation in meanings) are those three which appear in reduplication (doublets) - so say the scholars.
* இச்சூத்திரத்தை “வாரா மரபின வரக் கூறுதலும்” (26) என்றும் சூத்திரத்தின் பின்னர் வைத்தார் தெய்வச் சிலையார் - எனினும் அவர் உரை இங்கேயே தொடர்பாக அமைக்கப்பட்டுள்ளது. |