ஒரு சொல் அடுக்கு சூ. 15 | 91 |
இளம் இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் வழக்கிற்கும் செய்யுட்கும் பொதுவாயதோர் முடிவு கூறுதல் நுதலிற்று. உரை : ஒரு சொல் பல கால் அடுக்கி மூன்று காரணமும் படச் சொல்லப்படும், எ-று. இசைநிறை யெனவை, அது செய்யுள் இலக்கணம் என்பது போந்தது. வ-று : ‘ஏஎ ஏஎ 1வம்பல் மொழிந்தனள்’ எனவரும். ஒழிந்தன இரண்டும் வழக்கினுள் அடுத்து வரும். அசைநிலை, ஒக்கும் ஒக்கும் எனவும், மற்றோ மற்றோ எனவும் வரும். பொருளொடு புணர்தல், பாம்பு பாம்பு, கள்ளர் கள்ளர், படை படை, தீத்தீ எனவரும் அவற்றை இனைத்தால் அடுக்கி வரும் என்பதனை முன்னர்ச் சொல்லுதும். சேனா இ-ள் : இசை நிறைவும், அசை நிலையும், பொருள் வேறுபாட்டோடு புணர்வதும் என ஒருசொல்லடுக்கு அம்மூன்று வகைப்படும், எ-று. உ-ம் : ‘ஏஎ ஏஎ அம்பல் மொழிந்தனள்’ என்றது இசை நிறை. மற்றோ மற்றோ, அன்றோ அன்றோ என்பன அசை நிலை. பாம்பு “பாம்பு, அவனவன், வைதேன் வைதேன், உண்டு உண்டு, போம் போம் என்பன, முறையானே, விரைவும், துணிவும் உடம்பாடும், ஒரு தொழில் பல்கால் நிகழ்தலும் ஆகிய பொருள் வேறுபா டுணர்த்தலிற் பொருளொடு புணர்தல். பொருள் வேறுபாடு பிறவும் உளவேல் வழக்கு நோக்கிக் கண்டு கொள்க.
1. அம்பல் - அலருக்கு முன் நிகழும் பழிச்சொல் |