அடுக்கு ஒரு சொல்லது விகாரம் எனப்படும். இரண்டு சொல்லாயின் இருபொருள் உணர்த்துவது அல்லது இப்பொருள் வேறுபாடு உணர்த்தாமையின் என்பது. தெய் ஒரு பொருள் மேல் ஒருசொல் அடுக்கி வரு வழி வரும் வேறுபாடு உணர்த்துல் நுதலிற்று. இ-ள் : ஒரு சொல்மேல் அடுக்கி வருஞ் சொல் இசை நிறைவாகி அடுக்குதல், அசை நிலையாகி யடுக்குதல், பொருளொடு புணர்ந்து வருதல் என மூவகைய என்ப ஆசிரியர், எ-று. ஒரு சொல்லடுக்கு எனப் பொதுவாக ஓதினமையாற் பெயர் முதலாகிய நான்குசொல்லும் அடுக்கப் பெறும் என்று கொள்க. *உ-ம் : | 1துறக்குவ னல்லன் துறக்குவ னல்லன் | | நுதொடர்வரை வெற்பன் துறக்குவ னல்லன் தொடர்புள் இனையவை தோன்றின் விசும்பிற் சுடருள் இருள்தோன்றி யற்று. (கலி. 41) |
இதனுள் முந்துற்ற சொற்பொருள் உணர்த்திற்று. ஏனைய இசைநிறைக்கண் வந்தன. இசைநிறையாவது பாட்டுக்குறித்து வரும். அசைநிலை செய்யுளின்பங் குறித்து வரும். “குறங்கென மால்வரை யொழுகிய வாழை வாழைப் பூவெனப் பொலிந்த வோதி” (புறம். 67)
* பொருள் : தொடர்ந்தமலையடுக்கத்தையுடைய வெற்பன் (தலைவன்) நம்மைத் துறக்கமாட்டான்; அப்படி நம்மிடையுள்ள நட்பில் துறத்தல் என்பது அவனிடம் தோன்றின் அது சூரியனிடம் இருள் தோன்றியது போலாம். முந்துற்றசொல்-துறக்குவன் அல்லன் என்பது ஏனைய-மற்றை இரண்டு. |