ஒரு சொல் அடுக்கு சூ. 15 | 93 |
என்றவழி வாழை யென்னுஞ் சொல் இரண்டனுள் 1ஒன்று அசை நிலையாயிற்று. 2நின்றன நின்றன நில்லா வெனவுணர்ந்து ஒன்றின ஒன்றின வல்லே செயிற்செய்க” (சிறுபாண் 20) என்ற வழி நின்றன பலவாதலின் அடுக்கிவந்த சொல்லும் பொருள் குறித்து நின்றது. பிறவுமன்ன. நச் இதுவும் தொகைச் சொற்போல அடுக்கி வருவன கூறுகின்றது. இ-ள் : ஒரு சொல் அடுக்கே - ஒரு சொல்லை அடுக்கும் அடுக்கு, இசைநிறை அசைநிலை பொருளொடு புணர்தல் என்று அவைமூன்று என்ப-இசை நிறையும் அசைநிலையும் பொருளொடு புணர்தலும் என்று சொல்லப்பட்ட அவை மூன்றும் என்று சொல்லுவர் ஆசிரியர், எ-று. உ-ம் : ‘ஏஎ ஏஎ அம்பல் மொழிந்தனள்’ - இஃது இசை நிறை. மற்றோ மற்றோ இஃது அசைநிலை. வந்தது வந்தது கூற்று (நாலடி 4) அவன் அவன், வைதேன், வைதேன், போம் போம் என்பன விரைவும், துணிவும், உடம்பாடும் ஒரு தொழில் பலகால் நிகழ்தலுமாகிய பொருள் வேறுபாடு உணர்த்தலின் பொருளொடு புணர்தல்.
1. பின்னுள்ள வாழை அசைநிலை. முன்னர் வாழை எனவந்தமையால் பின்னர்ப் பூ என்றாலே வாழைப் பூவைக் குறிக்கும். மீட்டும் வாழை என்றது தேவையில்லை; ஆதலின் அசைநிலை. 2. நின்றன நின்றன என்பன நின்ற பொருள்களின் வகைகளைக் குறித்தலின் பின்னர் நின்ற ‘நின்றன’ என்பது அசை நிலையாகாமல் பொருள் குறித்த அடுக்காய் வந்தது. |