பக்கம் எண் :

தொகை மொழித் தொடர் வகை சூ. 1695

 (வேற்றுமைத் தொகையே உவமத் தொகையே
வினையின் தொகையே பண்பின் தொகையே
உம்மைத் தொகையே அன்மொழித் தொகை என்று
அவ் ஆறு என்ப தொகைமொழி நிலையே)

ஆ. மொ. இல.

Case-compound, simile-compound,
Verbal-compound, quality-compound,
Conjunctive-compound, non-word-compound-
these six are said to be elliptical compounds

பி. இ. நூ.

வீரசோழியம். 45, 50

தற்புருடன் பலநெல் கன்மதாரயம் தாங்கியசீர்
நல்துகுவித் தொகை நாவார் துவந்துவம் நல்ல தெய்வச்
சொற்பயன் மாந்தர்கள் அவ்விய பாவமிதென்று தொன்மை
கற்பக மாப் பகர்ந்தார் தொகையாறும் கனங்குழையே.

வேற்றுமை உம்மை வினைபண் புவமை யொடு அன்மொழி யென்று
ஆற்றுந் தொகை செந்தழிணர்களா றென்பர் ஆய்ந்த பண்பில்
தோற்று மளவு வடிவு நிறம்சுவை சொல்பிறவும்
ஏற்றும் இருபல் அளவு நிறை எண் பெயரும்மையே.

நேமி. சொ. 60

வேற்றுமை யும்மை வினைபண்பு உவமையும்
தோற்றிய அன்மொழியும் தொக்கவிடத்-தேற்ற
இருசொல்லும் ஒன்றாம் இலக்கணத்தாற் பல்சொல்
ஒரு சொல்லாய்ச் சேறலும் உண்டு.

நன். 362

வேற்றுமை வினைபண்பு உவமை உம்மை
அன்மொழி யெனவத் தொகையா றாகும்.