பக்கம் எண் :

96தொல்காப்பியம்-உரைவளம்

பிரயோக விவேகம். 20

தற்புருடன் துவிகுப் பலநெற் கர்மதார்யனோடு
உற்பலவாள் நெடுங்கண் பசுந்தே மொழி ஒண்டொடியாய்
சொற்பயில் அவ்விய யிபாவம் ஏனைத்து வந்தன் எனக்
கற்பவர் கூறும் சமாசன்களே தொகைக் கட்டளையே:

இ. வி. 335

வேற்றுமைத்தொகை உவமத்தொகை வினைத்தொகை பண்புத்தொகை உம்மைத்தொகை அன்மொழித்தொகையெனக் கிளந்த அத்தொகை ஆறாகும்.

தொ. வி. 89.

தொகைநிலை வகைப்படின் தொகும் வேற்றுமைவினை உவமை பண்பு உம்மையோடு அன்மொழி ஆறே.

முத்து. ஒ. 94.

வேற்றுமை வினை பண்பு உவமை உம்மை
அன்மொழி எனத்தொகை அறுவகைப் படுமே.

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், தொகைச் சொற்களைப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று.

பெயரும் முறையும் தொகையும் அதுவே. வேற்றுமைத் தொகையை முன் வைத்தார் 1அப்பகுதிப்படும் ஆகலான். அன்மொழித் தொகையைப் பின்வைத்தார். அஃது எல்லாவற்றையும் பற்றிப் பிறக்குமாகலான்.

சேனா

இனித் தொகையிலக்கணம் உணர்த்துகின்றார்.


1. அப்பகுதிப்படும் அவ்வறுவகைப்படும். அறுவகை என்பது உருபுகளை ‘அது பகுதிப்படு மாகலான்’ என்றிருப்பின் நன்று என்பது கழகப்பதிப்பின் அடிக்குறிப்பு. அவ்வாறாயின் பகுதி என்பதற்கு எட்டுவகை என்க.