“நெடுவரை மிசையது குறுங்கால் வருடை தினைபாய் கிள்ளை வெரூஉ நாட வல்லைமன் றம்ம பொய்த்தல் வல்லாய் மன்றநீ யல்லது செயலே” 1 (ஐங்குறு-287) இது தலைவனைப் பழித்தது. “கானற் கண்டற் கழன்றுகு பைங்காய் நீனிற வருங்கழி யுட்பட வீழ்ந்தெழ வுறுகா றூக்கத் தூங்கி யாம்பல் சிறுவெண் காக்கை யாவித் தன்ன வெளிய விரியுந் துறைவ வென்று மளிய பெரியோர் கேண்மை நும்போற் சால்பெதிர் கொண்ட செம்மை யொருத்தி தீதி னெஞ்சங் கையறுபு வாடி நீடின்று விரும்பா ராயின் வாழ்தன்மற் றெவனோ தேய்கமா தெளிவே” 2 (நற்றிணை-345) இஃது ஆற்றாத தலைவியைக் கடிதின் வரைவேனென்று தலைவன் தெளிவிக்கப் புக்குழித் தோழி தெளிவிடை விலக்கியது. “குன்றக் குறவன் காதன் மடமகள் வென்றோட் கொடிச்சியைப் பெறற்கரிது தில்ல
1. கருத்து: பக்கம் 319-ல் காண்க. 2. கருத்து: துறைவ! இரங்குதலையுடைய பெரிய கேண்மையுடைய நும்மைப் போலும் பெரியோர் தாம் உரைத்த சூளுறவினைத் தெளியாத நெஞ்சத்துடனே சூளுறப் பெற்றார் செயலிழந்து வாடும்படி நெடுங்காலம் அவரை விரும்பாதிருப்பாராயின் அவர் வாழ்தல் என்பது எப்படி? அதனால் நீ எமக்குச் சூளுறவு செய்து தெளிவித்தலை விடுக. தொ-25 |