பைம்புறப் படுகிளி யோப்பலர் புன்புல மயக்கத்து விளைந்தனை தினையே” 1 (ஐங்குறு-260) இது புனங்காவல் இனியின்று என்றது. “என்னாங்கொ லீடி லிளவேங்கை நாளுரைப்பப் பொன்னாம்போர் வேலவர் தாம்புரிந்த-தென்னே மருவியா மாலை மலைநாடன் கேண்மை யிருவியா மேன லினி”2 (திணை-நூற்-18) இது தினை அரிகின்றமையுஞ் சுற்றத்தார் பொருள் வேட்கையுங் கூறியது. “வெறிகமழ் வெற்பனென் மெய்ந்நீர்மை கொண்ட தறியாண்மற் றன்னோ வணங்கணங்கிற் றென்று மறியீர்ந் துதிரந்தூய் வேலற் றரீஇ வெறியோ டலமரும் யாய்”3 (ஐந்-ஐம்-20) இது வெறி யச்சுறுத்தியது. “இனமீ னிருங்கழி யோத முலாவ மணிநீர் பரக்குந் துறைவ தகுமோ குணநீர்மை குன்றாக் கொடியன்னாள் பக்க நினைநீர்மை யில்லா வொழிவு”4 (திணைமொழி-44) இஃது அருள வேண்டும் என்றது.
1. கருத்து: பக்கம் 319-ல் காண்க. 2. கருத்து: பொல்லாத வேங்கை தினை கொய்யும் நாளைப் பூத்துத் தெரிவித்தது. கதிர் கொய்யப்பட்டு தாள்களாகத் தினைப்புனம் ஆகும். நம் தந்தையும் தமையன்மாரும் நினக்குப் பரிசமாகப் பெரிதும் பொன்னை விரும்புவர். எனவே இனி அடிக்கடி வந்து பழகிய நாடனொடு கொண்ட நட்பு என்னவாய் முடியுமோ? 3. கருத்து: பக்கம் 302-ல் காண்க. 4. கருத்து: துறைவ! நற்குணத் தன்மை குறையாத மலை போலும் வளமுடைய தன் தோழியிடம் நீ நினைக்கும் தன்மையில்லாமல் விட்டுப் பிரியும் பிரிவு தகுதியதாகுமோ? |