பக்கம் எண் :

களவியல் சூ. 24387

“மூத்தோ ரன்ன வெண்டலைப் புணரி
யிளையோ ராடும் வரிமனை சிதைக்குந்
தளையவிழ் தாழைக் கானலம் பெருந்துறைச்
சில்செவித் தாகிய புணர்ச்சி யலரெழ
வில்வயிற் செறித்தமை யுணராய் பன்னாள்
வருமுலை வருத்த வம்பகட்டு மார்பிற்
றெருமர லுள்ளமொடு வருந்து நின்வயி
னீங்குக வென்றியான் யாங்ஙன மொழிகோ
வருந்திறற் கடவுள் செல்லூர்க் குணாஅது
பெருங்கடன் முழக்கிற் றாகி யாண
ரிரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர்
கடுங்கட் கோசர் நியம மாயினு
முறுமெனக் கொள்குவ ரல்லர்
நறுநுத லரிவை பாசிழை விலையே” 1      (அகம்-90)

இது பொருண்மிகக் கொடுத்தல் வேண்டுமென்றது.

இன்னும் வரைவுகடாவுதற் பொருட்டாய் வேறுபட வருவன வெல்லாம் இதனான் அமைக்க.

“கோழிலை வாழைக் கோண்மிகு பெருங்குலை
யூழுறு தீங்கனி யுண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையோ டூழ்படு
பாறை நெடுஞ்சுனை விளைந்த தேற


1. கருத்து: தலைவ! முதியோர் நரைத்தலை போல வெள்ளிய அலையுடைய கடலானது தன் அலையால் இளமகளிர் ஆடும் சிற்றிலைச் சிதைக்கும்படியான தாழையுடைய கடற் கானல் துறையில் நம் சிலர் காதளவில் நின்ற நும் புணர்ச்சியானது பலர் காதுகளுக்கும் எட்டிய அலராகியது. அதனால் தாய் எம்மை இல்லில் செறித்தமையை நீ யுணராய். அதனால் பல நாளும் தலைவியின் மார்பு நின்னை வருத்த வருத்த முறும் உள்ளத்தோடு வரும் உன்னிடம் இனிவாராதே என யான் எப்படிக் கூறுவேன். செல்லூர் கிழக்கேயுள்ள கோசரது கடைத் தெருவாக இருந்தாலும் தலைவிக்குப் பரிச விலையாக அதை எமர் கொள்ள மாட்டார். அதனால் இனி நீ மிக்க பொருளுடன் விரைந்து வந்து வரைந்து கொள்க.