லறியா துண்ட கடுவ னயலது கறிவளர் சாந்த மேறல் செல்லாது நறுவீ யடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்குங் குறியா வின்ப மெளிதி னின்மலைப் பல்வேறு விலங்கு மெய்து நாட குறித்த வின்ப நினக்கெவ னரிய வெறுத்த வேஎர் வேய்மருள் பணைத்தோ ணிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட் டிவளு மினைய ளாயிற் றந்தை யருங்கடிக் காவலர் சோர்பத னொற்றிக் கங்குல் வருதலு முரியை பைம்புதல் வேங்கையு மொள்ளிணர் விரிந்தன நெடுவெண் டிங்களு மூர்கொண் டன்றே” (அகம்-2) ‘விலங்கும் எய்துநாட’ என்று அந்நாட்டினை இறப்பக் கூறி இந்நாடுடைமையிற் ‘குறித்த இன்பம் நினக்கெவ னரிய’ என வரைதல் வேண்டியவாறும்,வேங்கை விரிந்ததனால் தினையறுத்தலின் இற்செறிப்புக் கூறியவாறும், ‘கங்குல் வருதலும் உரியை’ எனப் பகற்குறி மறுத்து இரவுக்குறி நேர்வாள்போற் கூறி ‘நெடு வெண்டிங்களு மூர்கொண்டன்றே’ என்று அதனையும் மறுத்து வரைதற்கு நல்ல நாளெனக் கூறி வரைவு கடாயவாறுங் காண்க. “காமங் கடவ வுள்ள மினைப்ப யாம்வந்து காண்பதோர் பருவ மாயி னோங்கித் தோன்று முயர்வரைக் கியாங்கெனப் படுவது நும்மூர் தெய்யோ”1 (ஐங்குறு-237) இஃது ஊரை இறப்பக் கூறியது. ‘துணை புணர்ந்தெழுதரும்’ என்னும் நெய்தற்கலி (135) யுட்.
1. கருத்து: பக்கம் 322-ல் காண்க. |