1 “உள்ளூ தாவியிற் பைப்பய 2நுணுகி” (அகம். 71) எனவும், 3 “அரவுநுங்கு மதியி னுதலொளி கரப்ப” எனவும் வரும். இவை பொருளன்றி உவமையுங் கிழக்கிடப்பட்டனவாலெனின், அங்ஙனமாயினும் அவை பொருளோடு சார்த்தி நோக்க உயர்ந்தன வெனப்படும். (5) [முதல் சினைபற்றி உவமை வருங்கால் இவ்வாறு வரல்வேண்டும் எனல்] | 281. | முதலுஞ் சினையுமென் றாயிரு பொருட்கு நுதலிய மரபி னுரியவை யுரிய. |
இது, மேற்கூறி வருகின்ற உவமை, முதல்சினைபற்றி வருங்கால் இன்னவாறாகவென்கின்றது. இ--ள் : முதற்பொருளுஞ் சினைப்பொருளும் என்னும் அவ்விரண்டு பொருட்குங் குறித்தவகையான் மரபுபடவரின் உரியவை உரியவாம் என்றவாறு. இதன் கருத்து: முதலொடு முதலும், சினையொடு சினையும், முதலொடு சினையும், சினையொடு முதலும் வேண்டியவாற்றான் உவமஞ் செய்தற்கு உரியவெனவும், அங்ஙனஞ் செய்யுங்கால் மரபு பிறழாமைச் செய்யப்படுமெனவுங் கூறியவாறு. 4“வரைபுரையு மழகளிற்றின் மிசை” (புறம். 38) என்பது, முதற்குமுதலே வந்து உவமையாயிற்று; 5 “தாமரை புரையுங் காமர் சேவடி” (குறுந். கடவுள்) என்பது சினைக்குச் சினையே வந்து உவமையாயிற்று.
1. உள்ஊது ஆவி--கண்ணாடியின் உள்ளே (வாயான்,) ஊதிய ஆவி. 2. நுணுகல்--சுருங்கல் (குறைதல்). நுணுகுதற்கு ஆவி இழிவுபற்றி வந்த உவமை. இழிபு--குறைவு. 3. அரவு--பாம்பு. அரவு நுங்குமதி ஒளிமறைதல்போல ஒளிமறைய என்றபடி. 4. வரையும் களிறும் முதற் பொருள்கள். 5. தாமரை--தாமரைப்பூ. இது சினை. |