பக்கம் எண் :

126உவமவியல்

இக்கருத்து அறியார் இவற்றையும்,

“செப்பினும் வினாவினுஞ் சினைமுதற் கிளவிக்கு”

(தொ. சொ. 16)

என்புழி, இலேசுகொண்டு உரைப்ப.

(6)

[தொகையுவமையிற் பொதுத்தன்மையை அறியுமாறு இவ்வாறெனல்]

282.1சுட்டிக் கூறா வுவம மாயிற்
பொருளெதிர் புணர்த்துப் புணர்ந்தன கொளலே.

இஃது, எய்தாதது எய்துவித்தது.

இ-ள் : உவமத்திற்கும் பொருட்கும் பொதுவாகிய ஒப்புமைக் குணம் நான்கினையும் விதந்து சொல்லி உரையாதவழி அவ்விரண்டனையும் எதிர்பெய்து கூட்டி ஆண்டுப் பொருந்திய தொன்று பொருந்தியதுபற்றி வினை பயன் மெய் உருவென்னும் நான்கினுள் இன்னதென்று சொல்லப்படும் என்றவாறு

‘பவளம்போற் செந்துவர்வாய்’ என்பது, சுட்டிக்கூறியவுவமம்; என்னை? இரண்டிற்கும் பொதுவாகிய செம்மைக் குணத்தினைச் சொல்லியே உவமஞ் சொல்லினமையின். அது ‘பவளவாய்’ என்கின்றவழிச் சுட்டிக்கூறா வுவமமாம். ஆண்டுப் பவளத்தினையும் வாயினையுங் கூட்டிப்பார்த்துச் செம்மைக்குணம் பற்றி உவமஞ் செய்ததென்று அறியப்படும்; அல்லாக்கால், வல்லென்ற கல்லிற்கும் மெல்லென்ற இதழிற்கும் உள்ளதோர் ஒப்புமை ஆண்டில்லையென்பது; பிறவுமன்ன.

(7)

[உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டுமெனல்]

283.2உவமையும் பொருளு மொத்தல் வேண்டும்.

இதுவும் அது.

இ-ள் : உவமானமும் பொருளுந் தம்மின் ஒத்தனவென்று உலகத்தார் மகிழ்ச்சி செய்தல்வேண்டும் என்றவாறு.


1. சுட்டிக்கூறா வுவமையைத் தொகையுவமை என்பர் தண்டியாசிரியர். பொதுத்தன்மை தொகுவது தொகையுவமை என்றும் உருபு கூடத்தொகுவது தொகையுவமை என்றும் இரு பாலாகக் கூறுவர் ஆசிரியர்.

2. இச்சூத்திரத்திற்கு இளம்பூரணர் உவமை, இரட்டைக் கிளவியானும் நிரனிறை சுண்ணமாய் வரினும் அடையடுத்து வரினும்