பக்கம் எண் :

பொருளதிகாரம்127

“மயிற்றோகை போலுங் கூந்தல்”

என்பதன்றிக்,

“காக்கைச் சிறகன்ன கருமயிர்”

என்று சொல்லின், அஃதொத்ததெனப்படாதென்றவாறு.

“புலிபோலப் பாய்ந்தான்”

என்பதன்றிப் பிழையாமற் பாயும் என்பதேபற்றிப்

“பூசைபோலப் பாய்ந்தான்”

எனின், அதுவும் ஒப்பென்று கொள்ளாது உலகமென்றவாறு. ஈண்டு ஒத்தவென்பதனை,

1“ஒத்த தறிவான்”

(குறள். 22-4)

என்பதுபோலக் கொள்க.

[உவமேயமும் உவமமாகக் கூறப்படுமெனல்]

284.பொருளே யுவமஞ் செய்தனர் மொழியினு
மருளறு சிறப்பினஃ துவம மாகும்.

இது மேற்கூறியவாறன்றி வருவதோர் உவமை விகற்பங் கூறுகின்றது.

இ-ள் : ‘உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங்காலை’ (278) என்புழி, உவமம் உயர்ந்துவரல் வேண்டுமென்றான்; இனிப் பொருளினை உவமமாக்கி உவமையை உவமிக்கப்படும் பொருளாக்கி மயங்கக் கூறுங்காலும் 2அஃது உவமம்போல உயர்ந்ததாக்கி வைக்கப்படும் என்றவாறு.

“வருமுலை யன்ன வண்முகை யுடைந்து
திருமுக மவிழ்ந்த தெய்வத் தாமரை”

(சிறுபாண். 72-3)


தொழிற்பட்டு வரினும் ஒன்றும் பலவுமாகி வரினும் உவமேயமு மவ்வாறே வருதல்வேண்டும். அவ்வழியன்றி மிக்குங் குறைந்தும் வருவது குற்றமென்றவாறாம் என்று பொருள்கொள்வர். அதுவும் பொருத்தமாகவே தோன்றுகின்றது. இதனை உவமையும் பொருளு மொத்தல்வேண்டும்; அன்றேல் வழுவாம் என்று அபவாதம் விதிக்க வந்ததாகக் கோடலுமாம். சரசுவதி கண்டாபரணம் என்னும் வடநூற் கருத்து மிதனோடொப்புடையது. அபவாதம்--வழு.

1. ஒத்தது--உலகத்தார் ஒப்புக்கொண்டது.

2. அஃது--உவமேயம். (பொருள்)