பக்கம் எண் :

130உவமவியல்

இவ்வாறன்றி ‘மேரு மால்வரை காம்பொத்து விண்முகடு குடையொத்து விண்மீன் கணம் முத்துப்போன்றன’ என வடிவு பற்றி உவமங் கூறுதல் 1தமிழ் வழக்காகின்றதென்பது.

இனி,

2“வள்ளத்தி னீர்கொண் டுமிழ்ந்த முலைச்சாந்து மறுகிற்பரந்
 தள்ளல் யானையெல்லா மடிவழுக் கினவே.”

என்பதோவெனின், அவ்வாற்றானும் இன்பங் கொள்வார்க்கு அவையும் இழுக்கில என்பது.

“சோறு வாக்கிய கொழுங் கஞ்சி
 யாறு போலப் பரந்தொழுகி.”

(பட்டின. 44--45)

என்பதோவெனின், யாறென்ற துணையானே பேர்யாறெனக் கொண்டு உலகிறந்தனவாகாமைக்கன்றே,

3“ஏறுபொரச் சேறாகித்
 தேரோடத் துகள்கெழுமி.”

(பட்டின. 46--47)

என்பதாயிற்றென்றது.

(10)

[உவம உருபுக ளிவையெனல்]

286.அவைதாம்,
அன்ன வேய்ப்ப வுறழ வொப்ப
வென்ன மான வென்றவை யெனாஅ
வொன்ற வொடுங்க வொட்ட வாங்க
வென்ற வியப்ப வென்றவை யெனாஅ
வெள்ள விழைய விறப்ப நிகர்ப்பக்
கள்ளக் கடுப்ப வாங்கவை யெனாஅக்
காய்ப்ப மதிப்பத் தகைய மருள
மாற்ற மறுப்ப வாங்கவை யெனாஅப்
புல்லப் பொருவப் பொற்பப் போல

1. தமிழ் என்பது தழீஇ என்றும் பாடமுள்ளது. இதுவும் பெருமைபற்றியதாயினும் சிறப்பிற்றீராமையிற் றழுவப்பட்டு வழக்காகின்றது என்பது கருத்து. தமிழ் வழக்காகின்றது என்பதும் பொருந்துமேற் கொள்க.

2. வள்ளம்--சிறு கிண்ணம். மகளிரின் மிகுதி கூறலின் இதுவும் இழுக்கிலது என்றபடி.

3. பேராறு ஏறுழக்கச் சேறாகாது; தேரோடத் துகள் கெழுமாது; ஆதலால் சிற்றாறென்றபடி.