வெல்ல வீழ வாங்கவை யெனாஅ நாட நளிய நடுங்க நந்த வோடப் புரைய வென்றவை யெனாஅ வாறா றவையு மன்ன பிறவுங் கூறுங் காலைப் பல்குறிப் பினவே. இஃது, உவமத்தினையும் பொருளினையும் ஒப்பிக்குங்கால் இடைவருஞ் சொல் இனைத்தென்கின்றது. ‘அவைதாம்’ என்பது வினை பயன் மெய் உருவென்னு நான்குவகையு மென்றவாறு. இ--ள் : இவை எண்ணப்பட்ட முப்பத்தாறு சொல்லும் இவையேபோல்வன பிறவும் வழக்கிடத்துஞ் செய்யுளிடத்தும் வேறுபடு குறிப்பினவாகி வரும் என்றவாறு. ‘ஆறாறவையும்’ என்பது அவை முப்பத்தாறு மென்றவாறு, ‘பல்குறிப்பின’ என்பது அவை இடைச்சொல்லாகித் தொக்கு வருவனவுந் தொகாதே நிற்பனவும் வினைச்சொல்லாகி வேறுபட நிற்பனவுமெனப் பலவாமென்றவாறு. இவ்வோதிய வாய்பாடெல்லாம் நான்கு உவமத்திற்கும் பொதுவென்பது ஈண்டுக்கூறி, இனி அவை 1சிறப்புவகையான் உரியவாறு இதுவென்பது மேற்கூறுகின்றான். ‘பிறவும்’ என்பதனான் எடுத்தோதினவேயன்றி நேர நோக்க துணைப்ப மலைய ஆர அமர அனைய ஏர ஏர்ப்ப செத்து அற்று கெழுவ என்றற்றொடக்கத்தன பலவும், ஐந்தாம் வேற்றுமைப் பொருள்பற்றி வருவனவும், எனவென்னெச்சங்கள்பற்றி வருவனவும், பிறவுமெல்லாங் கொள்க. ஈண்டு எடுத்தோதியவற்றுள் 2வரையறை வகையவென மேற்கூறப்படுவன பொதுவகையான் வருமாற்றுக்கும் உதாரணம், அவற்றை 3உரிமை
1. சிறப்புவகை என்றது வினை பயன் மெய் உரு என்பவற்றிற்குத் தனித்தனி உரியவாம் வகையை. 2. வரையறை வகையவென்றது, வினையுவமை இவை பயனுவமை இவை என்றாற்போல வரையறை செய்யப்பட்ட வகையை யுடையவற்றை. கூறப்படுவன வருமாற்றுக்கும் என இயைக்க. 3. உரிமைவகை என்றது வினைக்குரியன இவை பயனுக்குரியன இவை என உரிமை கூறும் வகையை. என்றது சிறப்புச் சூத்திரத்துட் காட்டும் உதாரணங்களை. |