பக்கம் எண் :

132உவமவியல்

வகையான் உதாரணங் காட்டும்வழிக் காட்டுதும். ஆண்டு எடுத்தோதாதன ஆறெனப்படும்; அவை, ஒன்ற என்ற மாற்ற பொற்ப நாட நடுங்க என்பன. அஃதேல் ஆண்டு வரையறை கூறப்பட்டன எண்ணான்கு முப்பத்திரண்டாயி னவாறென்னை,--முப்பதேயாகல்வேண்டுமால் அவையெனின், அவற்றோடு புறனடையாற் கொண்டவற்றுள்ளும் நேர நோக்க என்னும் இரண்டு கூட்டி ஓதினான் ஆண்டென்பது.

அவை; பொதுவகையான் வருமாறு:--

“வே1லொன்று கண்ணார்மேல் வேட்கைநோய் தீராமோ
 கோலொன்று கண்ணொன்று கொண்டு,”

என்பது வினையுவமம்.

“மழையொன்று வண்டடக்கை வள்ளியோற் பாடி.”

என்பது பயனுவமம்.

“வேயொன்று தோளொருபால் வெற்பொன்று தோளொருபால்.”

என்பது மெய்யுவமம்.

“குன்றியுங் கோபமு மொன்றிய வுடுக்கை.”

என்பது உருவுவமம்.

ஒழிந்தனவும் இவ்வாறே நான்கு பகுதியும்பற்றி வருமாறு கண்டுகொள்க.

‘வாயென்ற பவளம்’ என்றது பண்புவமைபற்றி வந்தது.

இது ‘வாயாகிய பவளம்’ என்று ஆக்கச் சொல்லானும் வரும்.

“மணிநிற 2மாற்றிய மாமேனி”

என்பது உருவுவமம்.

“மதியம் பொற்ப மலர்ந்த வாண்முகம்”

என்பது மெய்யுவமம்.

“வேயொடு 3நாடிய தோள்”

என்பது, நாடவென்பது வந்த மெய்யுவமம்.

“படங்கெழு நாக 4நடுங்கு மல்குல்”

என்புழி, நடுங்கவென்பது மெய்யுவமம்பற்றி வந்தவாறு. இவ்வோதிய வாய்பாட்டோடு பொருந்தவருஞ் சொல்லெல்லாம்


1. ஒன்ற என்னும் உவம உருபிற்குதாரணம்.

2. மாற்ற என்பதற் குதாரணம்.

3. நாட என்பதற் குதாரணம்.

4. நடுங்க என்பதற் குதாரணம்.