பக்கம் எண் :

134உவமவியல்

“மதியொத்தது மாசற்ற திருமுகம்.”

என்றவழி, உவமமாயினும் உவமத்தொகை யெனப்படாது, 1தொகைப்பாடின்மையினென்பது.

(11)

[வினை உவம உருபுக ளிவையெனல்]

287.அன்ன வாங்க மான விறப்ப
வென்ன வுறழத் தகைய நோக்கொடு
கண்ணிய வெட்டும் வினைப்பா லுவமம்.

இது, மேற் பொதுவகையாற் கூறியவாறன்றி வினையுவமைக்கட் சிறந்து வருவன இவையென வரைந்து கூறுகின்றது.

இ--ள் :இவ்வெட்டும் வினையுவமம் என்றவாறு.

“எரியகைந் தன்ன தாமரைப் பழனத்து.”

(அகம். 106)

எனவும்,

“கயநா டியானையின் முகனமர்ந் தாங்கு,”

(அகம். 6)

எனவும்,

“கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்.”

(குறுந். 9)

எனவும்,

“புலிவிறப்ப வொலி தோற்றலின்.”

எனவும்,

“புலியென்னக் 2கலிசிறந் துராஅய்.”

எனவும்,

“மின்னுற 3ழிமைப்பிற் சென்னிப் பொற்ப.”

(திருமுரு. 85)

எனவும்,

“பொருகளிற் 4றெருத்திற் புலித்தகைப் பாய்த்துள்.”

எனவும்,


1. தொகைப்பாடின்மையின்--தொகைப்படுதலின்மையின். ஒத்தது என்பது முற்றாய் நின்று முகத்திற்குப் பயனிலையாதலின்; ஆண்டுத் தொகைப்பாடில்லை என்றபடி. மதிமுகம் எனவரிற்றான் தொகையாகும். இஃது உவம உருபே பயனிலையாய் விரிந்து நிற்றலின் தொகுக்கமுடியாது என்றபடி.

2. கலி--ஒலி.

3. இமைப்பு--விளக்கம்.

4. எருத்து--பிடர்.