“மானோக்கு நோக்கு மடநடை யாயத்தார்.” எனவும் வரும். இனிக், “கார்மழை முழக்கிசை கடுக்கும்.” எனவும், “யாழ்கெழு மணிமிடற் றந்தணன்.” (அகம். கடவுள்) எனவும், “ஒளித்தியங்கு மரபின் வயப்புலி போல.” (அகம். 22) எனவும், 1“ஒழுகை நோன்பக டொப்பக் குழீஇ.” எனவும், “குறுந்தொடி யேய்க்கு மெலிந்துவீங்கு 2திவவின்.” (பெரும். 14) எனவும், பிறவாய்பாட்டாற் சிறுபான்மை வரும் வினையுவமம் பொது விதியாற் கொள்ளப்படும். பிறவுமன்ன. (12) | 288. | அன்னவென் கிளவி பிறவொடுஞ் சிவணும். |
இஃது, எய்தியது இகந்துபடாமற் காத்தது. இ--ள் : வினைக்கே உரிமையெய்தியதாகக் கூறிய அன்ன வென்பது நான்குவமைக்கும் உரிமையொக்கவரும் என்றவாறு. அவை:-- “மாரியன்ன வண்கை.” (புறம். 153) எனவும், “இலங்குபிறை யன்ன விலங்குவால் வையெயிற்று.” (அகம். கடவுள்) எனவும், “செவ்வா னன்ன மேனி.” (அகம். கடவுள்) எனவும் 3ஒழிந்த மூன்றற்கும் பெருவரவினான் வந்தவாறு வழக்கு நோக்கி உணர்க.2"> (13)
1. ஒழுகை--சகடம். பகடு--எருமையாண். 2. திவவு--நரம்புக்கட்டு. 3. ஒழிந்தமூன்று--வினையொழிந்த பயன் மெய் உரு என்ற மூன்று. |