பக்கம் எண் :

136உவமவியல்

[பயவுவம உருபுக ளிவையெனல்]

289.எள்ள விழையப் புல்லப் பொருவக்
கள்ள மதிப்ப வெல்ல வீழ
வென்றாங் கெட்டே பயனிலை யுவமம்.

இது, முறையானே பயனிலை யுவமைக்குச் சிறந்த வாய்பாடு இவையென்ப துணர்த்துதல் நுதலிற்று.

இ--ள் : இவை எட்டும் பயனிலையுவமம் என்றவாறு.

1“எழிலி வான மெள்ளினன் றரூஉங்
2கவிகை வண்மைக் கடுமான் றோன்றல்.”

எனவும்,

“மழைவிழை தடக்கை வாய்வா 3ளெவ்வி.”

எனவும்,

“புத்தே ளுலகிற் 4பொன்மரம் புல்ல.”

எனவும்,

“விண்பொரு புகழ் விறல் வஞ்சி.”

(புறம். 11)

எனவும்,

“கார்கள்ள வுற்ற பேரிசை யுதவி.”

எனவும்,

5“இருநிதி மதிக்கும் பெருவள் ளீகை.”

எனவும்,

“வீங்கு 6சுரை நல்லான் வென்ற வீகை.”

எனவும்,

“விரிபுனற் பேர்யாறு வீழ யாவதும்
 வரையாது சுரக்கு முரைசா றோன்றல்.”

எனவும் இவை ஓதியமுறையானே பயவுவமைபற்றி வந்தன. இவை எட்டும் ‘பெருவரவின’ எனவே, சிறுவரவினான்

“அழல்போல் வெங்கதிர் பைதறத் தெறுதலின்.”

எனவும்,


1. எழிலி--மேகம்.

2. கவிகை--இடக்கவிந்த கை.

3. எவ்வி--ஒரு வள்ளல்.

4. பொன்மரம்--கற்பகம்.

5. இருநிதி -- சங்கநிதி பதுமநிதி உடையவன். என்றது குபேரனை. இஃது ஆகுபெயர்.

6. சுரை--முலைமடி.