பக்கம் எண் :

பொருளதிகாரம்137

“மகன்றா யாதல் புரைவதா லெனவே.”

(அகம். 16)

எனவும்,

“ஊறுநீ ரமிழ் தேய்க்கு மெயிற்றாய்.”

(கலி. 20)

எனவும்,

“பல்லோ ருவந்த வுவகை யெல்லா
 மென்னுட் பெய்தந் தற்றே.”

எனவும்,

“யாழ்கொண்ட விமிழிசை யியன்மாலை யலைத்தரூஉம்.”

(கலி. 29)

எனவும்,

“உருமெனச் 1சிலைக்கு மூக்கமொடு.”

எனவும்,

“யாழ் 2செத்,
 திருங்கல் விடரளை யசுண மோர்க்கும்.”

(அகம். 88)

எனவும்,

“செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை.”

(முரு. 5)

எனவும்,

“விண்ணதி ரிமிழிசை கடுப்பப் பண்ணமைத்து.”

(பத். மலை. 2)

எனவும் வரும்; பிறவுமன்ன. மேலைச் சூத்திரத்திற் சொல்லியவாறே இதற்கும் வேண்டுவன உரைத்துக்கொள்க.

(14)

[மெய்யுவம உருபுக ளிவையெனல்]

290.கடுப்ப வேய்ப்ப மருளப் புரைய
வொட்ட வொடுங்க வோட நிகர்ப்பவென்
றப்பா லெட்டே மெய்ப்பா லுவமம்.

இது, முறையானே மெய்யுவமத்திற்குரிய வாய்பாடு கூறுகின்றது.

இ--ள் : இவ்வெட்டும் மெய்யுவமம் என்றவாறு.

“நீர்வார் 3நிகர்மலர் கடுப்ப.”

எனவும்,

“மோட்டிரும் பாறை யீட்டு 4வட்டேய்ப்ப.”

(அகம். 15)

எனவும்,


1. சிலைத்தல்--ஒலித்தல்.

2. செத்து--கருதி.

3. நிகர்மலர்--இணைமலர் (தம்முளொத்தமலர்). நிகர்--ஒளியுமாம்.

4. வட்டு--உருண்டை.