பக்கம் எண் :

138உவமவியல்

“வேய்மருள் பணைத்தோள் ஞெகிழ.”

(குறு. 318)

எனவும்,

“உரல் புரை பாவடி.”

(கலி. 21)

எனவும்,

“முத்துடை 1வான்கோ டொட்டிய முலைமிசை.”

எனவும்,

“பாம்புரு வொடுங்க வாங்கிய நுசுப்பின்.”

எனவும்,

“செந்தீ யொட்டிய வெஞ்சுடர்ப் பரிதி.”

எனவும்,

“கண்ணொடு நிகர்க்குங் கழிப்பூங் குவளை.”

எனவும், இவை ஓதிய முறையானே மெய்யுவமத்துக்கண் வந்தவாறு.

இவற்றை உரிமை கூறிப் பெருவரவினவெனவே ஒழிந்தனவுஞ் சிறுபான்மை வருமென்பதூஉம் அவை பொதுச் சூத்திரத்தான் (286) அடங்குமென்பதூஉங் கொள்க.

அவை:--

“கடல்போற் றோன்றல கா2டிறந் தோரே.”

(அகம். 1)

எனவும்,

“அஞ்3சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி.”

(அகம். 11)

எனவும்,

“புலிசெத்து வெரீஇய புகர்முக வேழம்.”

(அகம். 12)

எனவும்,

“சேயித ழனைய வாகி”

(அகம். 19)

எனவும்,

“மாணெழில் வேய்வென்ற தோளாய்நீ வரிற்றாங்கும்.”

(கலி. 20)

எனவும்,

“கண்போன் மலர்ந்த சுனையும்.”

எனவும்,

“நறுமுல்லை நேர்முகை யொப்ப நிரைத்த.”

(கலி. 22)

எனவும்,

“முழவுறழ் தடக்கையி னியல வேந்தி.”

(முருகு. 215)


1. வான்கோடு--வெண்கோடு.

2. இறந்தோர்--கடந்தோர்.

3. சுடர்நெடுங்கொடி--விளக்கின் நெடிய வரிசை.